மட்டக்களப்பு ஆனைப்பந்தி இராம கிருஷ்ண மிஷன் பெண்கள் மகா வித்தியாலயத்தின் பவளவிழா மற்றும் பரிசளிப்பு விழா இன்று (16.05.2012) பாடசாலையின் ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது. இவ்விழாவில் விசேட திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்கள் ஆசிரியர்கள் பரிசில்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டதோடு பல கலை நிகழ்சிகளும் இடம்பெற்றன. இவ் விழாவிற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கலந்து கொண்டார். சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாணசபை [...]
16 May 2012
வாழைச்சேனையில் நாளை மின் வெட்டு
இலங்கை மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் காரணமாக வாழைச்சேனை பிரதேசத்தில் மின் வெட்டு இடம்பெறவுள்ளது. மே 17ஆம் திகதி நாளை வியாழக்கிழமை காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை வாழைச்சேனை ரெலிகொம் சந்தி தொடக்கம் வாழைச்சேனை மீன்பிடி துறைமுக சந்தி வரையான பகுதிகளில் இந்த மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
16 May 2012
மட்டக்களப்பு அரச அதிபராக திருமதி சார்ள்ஸ் கடமைகளை பொறுப்பேற்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்க அதிபராக திருமதி பி.எஜ்.எம்.சாள்ஸ் இன்று புதன்கிழமை தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். மாவட்ட செயலகத்திற்கு வருகைதந்த புதிய அரசாங்க அதிபருக்கு மாவட்ட செயலக ஊழியர் நலன்புரி சங்கத்தினால் வரவேற்பளிக்கப்பட்டது. மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சமயவழிபாடுகளை தொடர்ந்து இவர் தமது பதவிகளை பொறுப்பேற்றுக்கொண்டார். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், இரா.நெடுஞ்செழியன் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் பெண் அரசாங்க அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.
15 May 2012
பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சகர வண்டிகள் வழங்கல்
தனியார் போக்குவரத்து அமைச்சின் கீழுள்ள தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போக்குவரத்து வசதியற்ற 200 பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சகர வண்டிகள் இன்று செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன. குறித்த துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் வைபவம் ஆரையம்பதி நந்தகோபன் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தனியார் போக்கவரத்து அமைச்சர் சி.பி.ரத்னாயக்க, கிழக்கு மாகாண கல்வி மற்றும் போக்குவரத்து அமைச்சர் விமலவீர திஸாநாயக்கா, கிழக்கு மகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், தேசிய போக்குவரத்து ஆணைக்கழுவின் [...]
15 May 2012
வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தின் கல்விக் கண்காட்சியினை கிழக்கு முதல்வர் பார்வையிட்டார்
வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெறும் கல்விக் கண்காட்சியினை கிழக்கு முதல்வர் இன்று 15.05.2012 சென்று பார்வையிட்டார். இக் கல்விக் கண்காட்சி இன்றுடன் நிறைவுபெற இருந்தது. பலரின் வேண்டுகோளுக்கிணங்க நாளையும் கண்காட்சியினைப் பார்வையிட முடியும்.
15 May 2012
பேத்தாளை விபுலானந்த வித்தியாலய பரிசளிப்பு விழா
வாழைச்சேனை பேத்தாளை விபுலானந்த வித்தியாலய பரிசளிப்பு விழா இன்று (15.05.2012) பேத்தாளை விபுலானந்த வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இப்பரிசளிப்பு விழாவில் திறமைகளை வெளிப்படுத்திய பல மாணவர்கள் பரிசில்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர். இப்பரிசளிப்பு விழாவிற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாணசபை முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சி.சந்திரகாந்தன் அவர்களும் சிறப்பு அதிதியாக வலயக்கல்விப்பணிப்பாளர் சுபா சக்கரவர்த்தி அவர்களும் உயர் அதிகாரிகளும் பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
14 May 2012
மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு விழா மண்முனை வடக்கு பிரதேச செயலகம் முதலிடம்
மட்டக்களப்பு மாவட்ட செயலகம் நடாத்திய மட்டக்களப்பு மாவட்டத்திலான விளையாட்டு விழா நேற்று (13.5.2012) வாகரை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. யு.எஸ்.ஐட் நிறுவனத்தின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்த விளையாட்டு விழாவில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அராசங்க அதிபர் கே.விமலநாதன், மாவட்ட திட்ட மிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் வாகரை பிரதேச செயலாளர் செல்வி எஸ்.ராகுளநாயகி உட்பட பிரதேச செயலாளர்கள் அதிகாரிகள் முக்கியஸ்தர்கள் படை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த விளையாட்டு [...]
14 May 2012
மட்டக்களப்பில் சில இடங்களுக்கு நாளை மின்வெட்டு
இலங்கை மின்சார சபையின் அவசர திருத்த வேலைகள் காரணமாக நாளை 2012-05-15ம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 09 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை மட்டக்களப்பின் சில பகுதிகளில் மின்சாரம் தடைபடவுள்ளது. வாழைச்சேனை ரெலிகொம் சந்தி தொடக்கம் வாழைச்சேனை மீன்பிடி துறைமுக சந்திவரையுள்ள பிரதேசங்களில் மின்சாரம் தடைபடும் என மாவட்ட மின் பொறியியலாளர் பணிமனை தெரிவித்துள்ளது.
14 May 2012
பாடசாலை வாகனங்களுக்கு ஒரே வர்ணம் பூசுவதற்கான சட்டம் விரைவில்
பாடசாலை மாணவர்களை ஏற்றிச்செல்லும் சகல வான்கள் மற்றும் பஸ்களை ஒரே வர்ணம் பூசிய நிலையில் சேவையிலீபடுவதற்கான சட்டம் விலைவில் அமுலுக்கு வரவுள்ளதாக தனியார் போக்குவரத்துத்துறை அமைச்சர் சி.பி.ரட்னாயக்கா தெரிவித்தார். மட்டக்களப்பு பாடும்மீன் விடுதியில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இத்தகவலை அவர் வெளியிட்டார். இது தொடர்பாக மாகாண முதலமைச்சர்கள், மாகாணங்களின் போக்குவரத்து அமைச்சர்களுடன் பேச்சு நடத்தியுள்ளதாகவும் அவர் தெரிவத்தார். நாட்டில் சுமார் 12 ஆயிரம் வாகனங்கள் பாடசாலைக்கு மாணவர்களை ஏற்றிச்செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் மேலும் [...]
14 May 2012
சந்தணமடு ஆற்றில் மண் அகழ்வு தொழிலாளர்கள் எதிர் நோக்கிய பிரச்சினைக்கு கிழக்கு முதல்வரின் அயராத முயற்சியால் நிரந்தரத் தீர்வு
சந்தண மடு ஆற்றிலே மண் அகழ்வுத் தொழிலை மேற் கொள்வதன் மூலம் 1500 க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வந்தனர். இவர்கள் மண் அகழ்வதிலே பல கட்டுப்பாடுகளும் தடைகளும் இருந்து வந்தது. இதனை அறிந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் அவர்கள் முன்னர் ஒரு தடவை சந்தணமடு ஆற்றிற்கு நேரடியாகச் சென்று மண் அகழ்வுத் தொழிலாளர்களைச் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்து தற்காலிகமான தீர்வினையும் பெற்றுக் கொடுத்தார். குறித்த [...]


16 May 2012
0 Comments