சம்பூரை அண்டிய கிராம மக்களின் மீழ்குடியேற்ற நடவடிக்கைகள்

21 October 2008

செய்திகள்

சம்பூரை அண்டிய கிராம மக்களின் மீழ்குடியேற்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்துமுகமாக முதலமைச்சர் சந்திரகாந்தன் நேரில் சென்று பார்வையிட்டார்.

கிழக்கு மாகாணத்திலே பலமான ஓர் மாகாணசபை அமைக்கப்பட்டு,ஜனநாயகத்தையும், அபிவிருத்தியையும் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்ற இவ்வேளையிலே யுத்த சூழ்நிலை காரணமாக இடம்பெயர்ந்த மக்களின் மீழ்குடியேற்றும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்ட வருகின்றன.

இதனொரு கட்டமாக திருகோணமலை மாவட்டத்தின் பாரிய இடம் பெயர்வுகளுக்கு முகம் கொடுத்த மூதூர் பிரதேசத்திற்குட்பட்ட இடங்களான கட்டைபறிச்சான், சேனையூர், கணேசபுரம் போன்ற இடங்களுக்கு சுமார் 450குடும்பங்கள் முதற்கட்டமாக குடியமர்த்தப்பட்டுள்ளார்கள். இமமக்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் பிற வசதிகளான பாதுகாப்பு, வீதிபுனர் நிர்மானம் அத்தோட அவர்களுக்கான தற்காலிக இருப்பிட வசதிகள் மற்றும் சுகாதாரம், கல்வி போன்ற பிற வசதிகளை முதலமைச்சரின் பணிப்பிற்கிணங்க அவரின் பிரத்தியேக செயலாளர் நந்தகோபன்(ரகு) அம்மக்களோடு மக்களாக நின்று அனைத்துத் தேவைகளையும் ஆற்றி வருகின்றார்.

இவ்வாறாக அங்கு குடியமர்ததப்பட்டுள்ள மக்கள் எவ்வாறான நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள் அத்தோடு அவர்கள் எவ்வாறான பிரச்சினைகளுக்க முகம் கொடுக்கின்றார்கள் என்பதனையெல்லாம் அவர்களிடத்திற்கு நேரடியாகச் சென்ற முதலமைச்சர் சந்திரகாந்தன் அம்மக்களைச் சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைகளை கேட்டறிந்து கொண்டார்.அத்தோடு கட்டை பறிச்சான் கிராமத்தினுடைய வனைப்பையும் அங்கு வாழ்ந்த மக்களின் வாழ்க்கைத்தரத்தையும் மீண்டும் ஏற்படுத்தித்தருவதற்கு தம்மாலான அனைத்து முயற்சிகளையம் மேற்கொள்வதாக உறுதியளித்ததார்.

முதலமைச்சர் சந்திரகாந்தன் கட்டைபறிச்சான் விபுலானந்த விதியாலயம்,சேனையூர் மத்திய மகா வித்தியாலயம் என்பவற்றிற்கு சென்று அங்கு நடைபெறுகின்ற கல்வி நடவடிக்கைகளையும் நேரடியாக பார்வையிட்டு, அங்குள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களோடு கலந்துரையாடி அவர்களின் பிரச்சினைகளையும் கேட்டறிந்து அவற்றினை நிவர்த்தி செய்வதாக குறிப்பட்டார்.
இச்சந்திப்பின் போது மக்கள் தங்களது பிரச்சினைகள் ஒவ்வொன்றினையும் மிகவும் தெளிவாக எடுத்துக்கூறினார்கள்.அத்தோடு தங்களிடம் நேரில் வந்து தமது பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டதற்கு அம் மக்கள் முதல்வருக்கு நன்றியினைத் தெரிவித்ததோடு, இதே போன்று இனிவருகின்ற காலங்களிலும் தங்களின் இடங்களுக்கு அடிக்கடி வந்து செல்ல வேண்டுமென அன்பாக வேண்டிக்கொண்டார்கள்.

மேலும் இங்குள்ள மக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதில் பெரும் பிரச்சினைகளை எதிர் நோக்குகின்றார்கள். இவற்றினை தீர்க்குமுகமாக இங்குள்ள மக்கள் தங்களுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் தங்களின் காலடியிலே நியாய விலையில் வாங்குவதற்கு வசதியாக பல நோக்கு கூட்டுறவு சங்கம் ஒன்றும் கட்டை பறிச்சானில் முதலமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது.இறுதியில் அப் பரதேசத்திற்கு பொறுப்பான பாதுகாப்பு உயர் மட்ட அதிகாரிகளையும் சந்தித்த பேச்சு நடாத்தினார். இந் நிகழ்வில் பிரத்தியேக செயலாளர் நந்தகோபன்(ரகு), மூதூர்பிரதேச செயலாளர் செல்வநாயகம், கிராமசேவை உத்தியோகஸ்த்தர்களான மஜீத், பரஞ்சோதி, முதலமைச்சரின் இணைப்பாளர் பிரசாந்தன், இன நல்லுறவு பணியகத்தின் பணிப்பாளர் எம்.ஆர். ஸ்டாலின் மற்றும் பாதுகாப்ர் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

,

No comments yet.

Leave a Reply