பூமியைத் தாக்கவுள்ள விண்கல் - 2036 இல் பேரழிவு அபாயம்?

apophis

2012 இல் உலகம் அழிந்து விடும் என்று ஏற்கனவே பல ஐயப்பாடுகள் நிலவி வரும் இக்காலத்தில் இது குறித்து மக்கள் மேலும் அச்சமடையும் நோக்கத்தில் மாயன் கலெண்டரின் மும்மொழிவை அடிப்படையாகக் கொண்டு 2012 எனும் பெயரில் ஹாலிவுட் திரைப்படம் ஒன்று சமீபத்தில் வெளிவந்து உலக அழிவைப் பல கோணங்களிலும் படம் பிடித்து நம் கண் முன்னே நிறுத்தியது.

இதனைத் தொடர்ந்து உலக அழிவு குறித்த விவாதங்கள் மறுபடியும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளன என்றால் அது மிகையாகாது.

இந்நிலையில் தற்போது 2036 இல் நிஜமாகவே ஒரு விண்கல் பூமி மீது மோதவுள்ளதாகவும் இதனால் மிகப்பெரியளவில் பூமியில் உயிர்ச்சேதம் ஏற்படவுள்ளதாகவும் சர்வதேச விண்வெளி ஆய்வு வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். அபோஃபிஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள இவ்விண்கல் 350 மீட்டர் சுற்றளவும் 1 000 000 டன் எடையும் உடையது. 2029 ஆம் ஆண்டளவில் பூமியிலிருந்து 30000 கிலோமீட்டர் தொலைவிற்கு நெருங்கி வரும் இவ் விண்கல் 2036 இல் புவி வட்டப் பாதைக்குள் நுழைந்து விடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

தற்போது இந்த விண்கல்லை பூமியில் விழாமல் தடுக்க அமெரிக்கா உள்ளிட்ட விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள ஏனைய நாடுகளுடன் இணைந்து ரஷ்ய விஞ்ஞானிகள் முயற்சிகளில் இறங்கியுள்ளதாகக் கூறப்பட்டு வருகின்றது.