வட கிழக்கு மாகாணங்களில் நான்கு விசேட கைத்தொழில் வலயங்கள் அமைக்கவுள்ளதாக கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சின் உதவி செயலாளர் எஸ்.கே.ஜயசிங்க தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் வட மாகாணத்தில் மன்னார்இயாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலும் இக்கைத்தொழில் வலயங்கள் அமைக்கப்படவுள்ளன. திருகோணமலை மாவட்ட கைத்தொழில் வலயம் 35 ஏக்கர் நிலப்பரப்பில் தம்பலகமப் பிரதேசத்தில் அமைக்கப்படுகிறது.
இதேவேளைஇ யாழ்ப்பாணத்தில் அச்சுவேலி பிரதேசத்தில் கைத்தொழில் பேட்டை ஒன்றை அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

12 May 2010
செய்திகள்