பாகிஸ்தானில் அபோதாபாத்தில் அல்கொய்தா பயங்கரவாத தலைவன் ஒசாமா பின்லேடன் பதுங்கியிருந்த கட்டிடம் அருகே இன்று காலை ராக்கெட் வெடிகுண்டு தாக்குதல் நடந்தது.
பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் பாகிஸ்தான் இராணுவ அகடமி அருகில் உள்ள கட்டிடம் ஒன்றில் ஒசாமா பதுங்கி இருந்தார்.
இதனை கண்டுபிடித்த அமெரிக்க கடற்படையினர் கடந்தாண்டு மே மாதம் சுட்டுக் கொன்றனர். அதன்பிறகு அந்த கட்டிடத்துக்கு சீல் வைக்கப்பட்டதுடன் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒசாமா தங்கியிருந்த கட்டிடத்தின் அருகில் மர்ம ஆசாமிகள் சிலர் ராக்கெட் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.
ஒசாமா கொல்லப்பட்ட பிறகு நடந்த முதல் தாக்குதல் இதுவாகும். இதுகுறித்து பொலீஸ் மூத்த அதிகாரி அப்துல் கரீம் கூறுகையில், ராக்கெட் வெடிகுண்டு வெடித்ததில் இராணுவ அகாடமியின் சுற்றுச்சுவர் மட்டும் சேதம் அடைந்தது. உயிர்ச் சேதம் எதுவும் இல்லை என்று தெரிவித்தார்.

27 January 2012
செய்திகள்