கிழக்கு பல்கலை உபவேந்தர் நியமனம் குறித்து ஆர்ப்பாட்டம்

27 January 2012

செய்திகள்

விண்ணப்பங்கள் கோரப்பட்டமைக்கு அமைவாகவே கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு நிரந்தர உபவேந்தர் ஒருவரை நியமிக்க வேண்டும் என வந்தாறுமூலையிலுள்ள கிழக்கு பல்கலைக்கழகம் மற்றும் கல்லடியிலுள்ள விபுலானந்த இசை, நடனக் கல்லூரி என்பவற்றில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

விரிவுரை பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் நேற்று நண்பகல் வந்தாறுமூலை வளாக முன்றலில் ஒன்றுகூடி கவனயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். நீண்டகாலமாக பதில் உபவேந்தரின் கவனிப்பில் இருந்துவரும் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு உபவேந்தர் நியமிக்கப்படும் வரை அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரி கடமையில் இருப்பார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் நிரந்தர உபவேந்தர் நியமிக்கப்படாமல் அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரி பதில் உபவேந்தராக நியமிக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டுள்ளது.

கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு நிரந்தர உபவேந்தர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும், அதனைவிடுத்து பதில் உபவேந்தரை நியமிப்பது தவறான அணுகு முறையாகும். அதேநேரம் விண்ணப்பங்கள் கோரப்பட்டமைக்கு அமைவாக மூவர் விண்ணப்பித்திருக்கின்ற நிலையில் பதில் உபவேந்தராக அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரியை நியமனம் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

எமது பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படுவதனைத் தவிர்த்து இவ்வாறான அணுகுமுறையினைக் கையாள்வது தவாறான நடவடிக்கையாகவே பார்க்கப்பட வேண்டும். உபவேந்தராக நியமிக்கப்படுபவர் பீடாதிபதி நிலையில் இருந்து வருபவராக இருப்பதே வழமையாகும். அந்த நடைமுறையை மாற்றி புதியவர் ஒருவரை நியமனம் செய்வதற்கு நாங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றோம் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர், பதிவாளர் போன்ற உயர் பதவிகளுக்கு நிரந்தர நியமனங்கள் செய்யப்படாத நிலையில் பல்வேறு பிரச்சினைகளை எதிர் இல்லாத நிலையில், அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரியாக நிமல் ரஞ்சித் அத்தநாயக்க கடந்த வருடத்தில் நியமிக்கப்பட்டிருந்தார். இவரை பதில் உபவேந்தராக நியமித்துள்ளதாகவும் அது தவறான நடைமுறை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் ‘உனடியாக நிரந்த உபவேந்தரை நியமனம் செய்’இ ‘எங்களுக்கு தற்காலிக உபவேந்தர் தேவையில்லை,ஏன் இந்த கொலவெறி’போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் தாங்கியிருந்தனர்.

Comments are closed.