மட்டு. மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை மின்துண்டிப்பு

27 January 2012

செய்திகள்

இலங்கை மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் காரணமாக  மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை  சனிக்கிழமை காலை 09.00 மணி தொடக்கம் பகல் 11.30 மணி வரை  மின்வெட்டு இடம்பெறவுள்ளது.

வீரகொட, சடையந்த,  புத்தந்கள, மண்டூர்,  சங்கர்புரம, கணேசபுரம், குறுமண்வெளி,  மகிழூர்,  பழுகாமம்,  கொக்கட்டிச்சோலை,  மகிழடித்தீவு, முதலைக்குடா, அம்பிலாந்துறை,  கடுக்காமுனை,  பெரியபோரதீவு, முனைத்தீவு, தும்பங்கேணி,  திக்கோடை,  39ஆவது கிராமம், தாந்தாமலை,  பெரியகல்லூறு,  கோட்டைக்கல்லாறு, களுவாஞ்சிக்குடி,  களுதாவளை,  தேற்றாத்தீவு,  செட்டிபாளையம்,  மாங்காடு,  குருக்கள்மடம்,  கிரான்குளம், புதுக்குடியிருப்பு , தாழங்குடா ஆகிய பகுதிகளிலேயே  மின்வெட்டு இடம்பெறவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் மட்டக்களப்பு மாவட்ட மின்பொறியியலாளர் பணிமனை தெரிவித்துள்ளது.

Comments are closed.