துப்பாக்கி முனையில் பிரபல நடிகை

துப்பாக்கி முனையில் பிரபல நடிகை ஒருவரை வாலிபர் மிரட்டி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரபல போஜ்புரி நடிகை ரிதுசிங், உபி மாநிலத்திற்கு படப்ப்பிடிப்பு ஒன்றுக்காக சென்றுள்ளார். அவருக்கு படக்குழுவினர் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தனி அறை ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிலையில் நள்ளிரவில் நடிகை ரிதுசிங் தூங்கி கொண்டிருந்தபோது கதவு தட்டும் சத்தம் கேட்டது. தூக்க கலக்கத்தில் எழுந்து வந்து கதவை திறந்த ரிதுசிங்கிற்கு அதிர்ச்சி காத்திருந்தது.
கதவை திறந்துவுடன் திடீரென உள்ளே நுழைந்த வாலிபர் ஒருவர் தன்னை திருமணம் செய்து கொள், இல்லையேல் துப்பாக்கியால் சுட்டுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் பயத்தில் ரிதுசிங் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு பக்கத்து அறையில் இருந்து வந்த வாலிபர் ஒருவர் நடிகையை காப்பாற்ற முயற்சித்தபோது அந்த வாலிபரை மர்ம வாலிபர் சுட்டதால் அவர் படுகாயம் அடைந்தார்.
இதனையடுத்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் சுமார் ஒரு மணி நேரம் போராடி நடிகையை மிரட்டிய வாலிரை வளைத்து பிடித்தனர். முதல்கட்ட விசாரணையில் அந்த வாலிபரின் பெயர் பங்கஜ் என்றும், உபி மாநிலத்தை சேர்ந்த அவர் மனநிலை சரியில்லாதவர் என்பதும் தெரிய வந்துள்ளது

Leave a Reply

Your email address will not be published.