இறுதிச்சுற்று பட நடிகை வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்; வலுக்கும் எதிர்ப்பு

  • Editor
  • 30 May 2019
  •   Comments Off on இறுதிச்சுற்று பட நடிகை வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்; வலுக்கும் எதிர்ப்பு

இறுதிச்சுற்று படம் மூலம் நடிகையாகி பிரபலமான ரித்திகா சிங்கின் கவர்ச்சி புகைப்படத்திற்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.

குத்துச் சண்டை வீராங்கனையான ரித்திகா சிங் இறுதிச்சுற்று படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர். முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பால் அனைவரையும் ஆச்சர்யப்படவைத்தார். அதன் பிறகு தெலுங்கு திரையுலகம் பக்கம் போனார்.

இறுதிச் சுற்று படத்தை அடுத்து தமிழில் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா ஆகிய தமிழ் படங்களில் நடித்தார். அரவிந்த்சாமியுடன் நடித்த வணங்காமுடி ரிலீசாகாமல் பைனான்ஸ் பிரச்சினையால் தவிக்கிறது. அதன் பின்னர் ரித்திகாவுக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் உள்ளது. ரித்திகாவுக்கு தமிழ் மட்டும் அல்ல தெலுங்கு திரையுலகிலும் வாய்ப்புகள் இல்லை.

இந்நிலையில் அவர் ஒரு போட்டோஷூட்டுக்கு உள்ளாடை அணியாமல் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். அந்த கவர்ச்சிப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

ரித்திகாவின் கவர்ச்சி புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உங்களுக்கு இது போன்று கவர்ச்சி செட்டாகாது, நீங்கள் நன்றாக நடிக்கத் தெரிந்தவர், இப்படி செய்யாதீர்கள் என்று தெரிவித்துள்ளனர். சிலரோ புகைப்படங்கள் சூப்பர், சூடாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.