நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்திவைப்பு

  • Editor
  • 20 Jun 2019
  •   Comments Off on நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்திவைப்பு

ஜூன் 23ம் தேதி நடக்க இருந்த வைத்து, சங்கங்களின் பதிவாளர் அலுவலகம் உத்தரவிட்டிருந்த நிலையில், `சுவாமி சங்கரதாஸ்’ அணியினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் ஐசரி கணேஷ் பேசிய போது,

“தேர்தலை நிறுத்தி வைத்துப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு உண்மையிலேயே எங்களுக்கும் பெரிய அதிர்ச்சியாகத்தான் இருக்கு. நாங்க நாடக நடிகர்களையெல்லாம் சந்திச்சு வாக்கு கேட்டு கிட்டத்தட்ட பிரசாரத்தை முடிச்சிட்டோம். தேர்தல் நடந்தா நிச்சயம் நாங்கதான் ஜெயிக்கப் போறோம். இதுதான் யதார்த்தம். இப்படியிருக்க, விஷால் அணியில சிலர் தேர்தல் நிறுத்தப்பட்டதன் பின்னணியில எங்க அணி இருக்கறதாக பேசினதா எங்க காதுக்குத் தகவல் வந்திருக்கு. எப்படி இப்படிப் பேசறாங்கன்னு தெரியலை.

மாவட்டப் பதிவாளர் தேர்தலை நிறுத்தி உத்தரவு பிறப்பிச்சா அதுல எங்களோட பங்கு என்ன இருக்கு? இதெல்லாம் வேண்டாத பேச்சுங்க. இன்னும் சி

 

லர் தேர்தல் ரத்தானதன் பின்னணியில தமிழக அரசு இருக்கறதாக்கூட சொல்லியிருக்காங்க. அதுபத்தியெல்லாம் நாங்க கருத்துச் சொல்ல விரும்பலை. எங்களுக்குத் தொடர்பில்லாததைப் பேச வேண்டிய அவசியமில்லை. எங்க கருத்து என்னன்னா, தேர்தல் அதிகாரியா நியமிக்கப்பட்ட நீதிபதி பத்மநாபன் வாக்காளர் பட்டியலை முறையாகச் சரிபார்த்து இறுதி செய்திருந்தார்னா, இன்னைக்குத் தேர்தல் ரத்தாகியிருக்காது. அந்த லிஸ்டுல அவ்வளவு குளறுபடி!