அஜித்துடன் தொடர்ந்து 3 படங்களா?

  • Editor
  • 11 Jul 2019
  •   Comments Off on அஜித்துடன் தொடர்ந்து 3 படங்களா?

பாலிவுட்டில் அமிதாப்பச்சன்இ டாப்ஸி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிங்க். இந்தப் படம் தற்போது நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரை எதிர்த்து வாதிடும் வழக்கறிஞராக ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுக்கிறார் வித்யாபாலன். மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்இ அபிராமிஇ ஆதிக் ரவிச்சந்திரன்இ டெல்லி கணேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் இரண்டு பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில்இ ஆகஸ்ட் மாதம் படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நேர்கொண்ட பார்வை படத்தின் புரமோஷன் பணிகளில் கவனம் செலுத்தி வரும் போனி கபூர்இ படம் குறித்து ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில்இ அஜித் சரி என்று கூறினால் அவருடன் தொடர்ந்து பணியாற்றத் தயார் என்று கூறியிருந்தார். இதனால் அவர் அஜித்துடன் தொடர்ந்து 3 படங்கள் இணைந்து பணியாற்றவுள்ளதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்திருக்கும் போனி கபூர்இ “அஜித்துடன் 3 படங்கள் ஒப்பந்தம் செய்திருப்பதாக ஊடகங்களில் செய்தி வருவதை நான் பார்க்கிறேன். அதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு ஒரு ஆக்‌ஷன் படத்தில் பணியாற்றுகிறோம். இந்த இரண்டு படங்கள் தவிர்த்து அவருடன் ஒரு இந்திப் படத்தில் பணியாற்ற விரும்புகிறேன். ஆனால் அதற்கு அஜித் இன்னும் பதிலளிக்கவில்லை” என்று கூறியுள்ளார்