நேற்று வந்தவரை இன்று கானோம் உறுமினார் சங்கரத்ன தேரர்

  • Editor
  • 11 Jul 2019
  •   Comments Off on நேற்று வந்தவரை இன்று கானோம் உறுமினார் சங்கரத்ன தேரர்

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்திற்கு 09.07.2019ம் திகதி பெயருக்கு வந்துபோன ஒரு கணக்காளர் 10.07.2019ம்திகதி வரவில்லை. இது வெறும்கண்துடைப்பு நாடகமா? அப்பாவி தமிழ்மக்களை அரசாங்கமும் த.தே.கூட்டமைப்பும் சேர்ந்து ஏமாற்றுகிறதா?

இவ்வாறு உண்ணாவிரதமிருந்த கல்முனை சுபத்ரா ராமய விகாராதிபதி வண.ரண்முத்துகல சங்கரத்ன தேரர் சீற்றத்துடன் கேள்வியெழுப்பினார்.

நாட்டின் பிரதமர் ரணில் விக்கிமசிங்க ,த.தே.கூட்டமைப்பினருடனான திங்கள் மாலை அலறிமாளிகைச்சந்திப்பின் பிரகாரம் (9) செவ்வாய்க்கிழமை காலை 9மணியளவில் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்திற்கு புதிதாக ஒரு கணக்காளர் பெயருக்கு வருகைதந்தார்.பின்னர் பகல் 1.30மணியளவில் சென்றார். ஆனால் (10) புதன்கிழமை அவரும் வரவில்லை.எந்த கணக்காளரும் நியமிக்கப்படவுமில்வை.
நேற்று வந்த கணக்காளர் அம்பாறை அரச அதிபரின் கட்டளைக்கிணங்க தான் இங்கு வருகை தந்துள்ளதாக் கூறியுள்ளார். அவரிடம் முறையானநியமனக்கடிதமோ இடாற்றக்கட்டளைக்கடிதமோ இருக்கவில்லையபம் என வண.சங்கரத்னதேரர் கூறுகின்றார்