கதிரவெளி மக்கள் சந்திப்பில் கலந்கிநின்ற பல பெண்போராளிகள்

  • Editor
  • 12 Jul 2019
  •   Comments Off on கதிரவெளி மக்கள் சந்திப்பில் கலந்கிநின்ற பல பெண்போராளிகள்

வாகரைப் பிரதேச கதிரவெளி வட்டாரத்தில் நடைபெற்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் மக்கள் சந்திப்பின் போது தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னால் பெண்போராளிகள் பலர் நாளாந்த வாழ்வாதாரத்திற்கும்,குடிநீருக்கும் மிகுந்த சிரமப்படுவதாக தமது நிலமையினை எடுத்தியம்பினர்.
1976ம் ஆண்டு தமிழ் தலைமைகளின் அரசியல் நோக்கிற்காக தமிழீழ கோரிக்கையினை முன்வைத்து இளைஞர்களை ஆயுததாரிகளாக்கிய தலைமைகள் அரசியலில் உச்சத்தில் உள்ளனர் ஆனால் ஆயுதம் ஏந்திபோராடிய முன்னால் போராளிகள் யுத்தத்தின் வடுக்களுடன் நாளாந்தம் வாழ்வாதாரத்திற்காக போராடிக் கொண்டுதான் இருப்பதனையும் சுட்டிக்காட்டினார்கள்; பின்னர் குறித்த பகுதிகளுக்கு விஜயம்செய்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதித்தலைவர் நாகலிங்கம் திரவியம் ,பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன்,மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் இவர்களின் தேவைகள் தொடர்பாக கலந்துரையாடியதுடன் குறித்த புதுநகர்பகுதிக்கான நீர்வளங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அறியமுடிகிறது