
ஒவ்வொருவருக்குமே இளமையுடன் நீண்ட நாட்கள் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஒருவரது வயது அதிகரிப்பதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால் இளமையைத் தக்க வைக்க முடியும். இதற்காக பெண்கள் பலர் அழகு நிலையங்களுக்குச் சென்று பல அழகு பராமரிப்பு செயல்களையும் மேற்கொள்வார்கள். ஆனால் ஆண்களுக்கு இதற்கெல்லாம் நேரம் இருப்பதில்லை.
ஆண்களுக்கு இருக்கும் ஒரே வழிஇ உணவுகளின் மூலம் இளமையைத் தக்க வைப்பது தான்.
நாம் நமது இளமையை ஒருசில உணவுப் பொருட்களின் மூலம் தக்க வைக்க முடியும். அதற்கு சரியான உணவுகளை ஒருவர் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். அதுவும் சரும செல்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் மற்றும் தக்க வைக்கும் உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுவது அவசியம்.
தயிர்
தயிரில் உள்ள கால்சியம் எலும்புகளை வலிமையாக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதே சமயம் இதில் வைட்டமின் டி இருப்பதால்இ தயிரில் உள்ள கால்சியம் உடலால் முழுமையாக உறிஞ்சப்படுகிறது. மேலும் இது எளிதில் செரிமானமாகக்கூடும். இதில் புரோட்டீனும் வளமான அளவில் நிறைந்துள்ளது. இதனை அன்றாட உணவில் ஆண்கள் சேர்த்து வந்தால்இ அது நீண்ட நாட்கள் இளமையை தக்க வைக்கும்.