பொலிஸாரிடம் 2280 பேர் சிக்கினர்

  • Editor
  • 12 Jul 2019
  •   Comments Off on பொலிஸாரிடம் 2280 பேர் சிக்கினர்

குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைதுசெய்வதற்காக பொலிஸார் முன்னெடுத்துள்ள சோதனை நடவடிக்கைகளில் 2280 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இன்று (12) காலை 6 மணி வரையான காலப்பகுதியில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 5ஆம் திகதி முதல் இந்த சோதனை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதுடன்இ நேற்று (11) காலை 6 மணிமுதல் இன்று காலை 6 மணி வரையான காலப்பகுதியில் மாத்திரம் 243 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.