கடலில் நீராடிக் கொண்டிருந்த குழந்தை மரணம்

  • Editor
  • 13 Jul 2019
  •   Comments Off on கடலில் நீராடிக் கொண்டிருந்த குழந்தை மரணம்

சிலாபம் கடற்கரைப் பகுதியில் நீராடிக் கொண்டிருந்த குழந்தை ஒன்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளது.

அத்துடன் குறித்த குழந்தையின் தாய் மற்றும் மற்றுமொரு குழந்தை சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (13) பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கண்டி பகுதியை சேர்ந்த 1 வருடமும் 2 மாதங்களுமான சௌமியா சத்சரணி எனும் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

சுற்றுலா ஒன்றிற்கு வருகை தந்து சிலாபம் கடலில் நீராடிக் கொண்டிருந்த போது குறித்த நபர்கள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு நீரில் இழுத்து செல்லப்பட்டவர்களை அங்கிருந்தவர்கள் மற்றும் மீனவர்கள் ஒன்றிணைந்து மீட்டு சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கும் போதே குழந்தை உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.