பிரபாகரனை பிரதிநிதித்துவப்படுத்திய பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் அமைதிகாத்தனர்

  • Editor
  • 13 Jul 2019
  •   Comments Off on பிரபாகரனை பிரதிநிதித்துவப்படுத்திய பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் அமைதிகாத்தனர்

நாவலப்பிட்டி பகுதியில் வசிக்கும் காணி உறுதி பத்திரம் இல்லாமல் இருந்த சுமார் 1200 பேருக்கு காணி உறுதி பத்திரம் வழங்கும் நிகழ்வு இன்று (13) நாவலப்பிட்டி பவ்வாகம பகுதியில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அரமச்சர் லக்ஸ்மன் கிரியல்ல
அவர் மேலும் தெரிவித்ததாவதுஇ 2015ம் ஆண்டு இருந்த அரசாங்கத்திற்கு எதிராக 2012இ 2013இ 2014 ஆகிய ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் சபையில் மூன்று பிரேரணைகள் முன்வைக்கப்பட்டன. அந்த பிரேரணைகள் மூன்றையும் அரசாங்கம் செயல்படுத்தவில்லை.

அதற்கு அமைய 2015ம் ஆண்டு மீண்டும் அரசாங்கம் ஆட்சி அமைத்திருந்தால் அந்த ஆண்டு மார்ச் மாதத்தில் பொருளாதார தடை வந்திருக்கும்.

முன்பு விஜேராஜசிங்க என் பௌத்த மன்னன் பெளத்தத்தை தழுவிய இலங்கையின் முதலாவது தமிழ் அரசனாக கருதப்பட்டான். அதேபோல் மடு தேவாலயத்தை அமைக்க இடம்பெற்றுக் கொடுத்தவர் கண்டி அரசர் ஒருவர்.

இவற்றை மறந்து இன்று இனவாதத்தை தூண்ட எதிர்கட்சியினர் முயற்சிக்கின்றனர். இவர்களுக்கு மீண்டும் ஆட்சி அதிகாரம் கிடைத்தால் அன்று பாராளுமன்றத்தில் நடத்துக் கொண்டதை போன்று சண்டையிட்டுஇ சொத்துகளுக்கு சேதம் விளைவித்து தம்மப்பதஇ பைபில் ஆகிய புனித நூல்களை வீசி ஏறிந்து கலகம் செய்தனர்.

அதேபோன்று தான் அவர்களின் ஆட்சியும் அமையும். பிரபாகரனும்இ பாராளுமன்றத்தில் நடந்துக் கொண்டதை போன்று செயற்படவில்லை. பிரபாகரனை பிரதிநிதித்துவப்படுத்திய பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் இருந்த போதும் அவர்களும் அவ்வாறு நடந்துக் கொள்ளவில்லை.
இந்நிகழ்வின் போதுஇ பிரதமர் ரணில் விக்கிரமசிங்கஇ காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்கஇ திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்தனஇ நாவலப்பிட்டி நகர சபை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.