கோதுமை மா இபால் மாவுக்கு விலை பட்டியல்

  • Editor
  • 22 Jul 2019
  •   Comments Off on கோதுமை மா இபால் மாவுக்கு விலை பட்டியல்

கோதுமை மா மற்றும் பால் மாவுக்காக விலை பட்டியல் அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கைத்தொழில் வர்த்தக அலுவல்கள் நீண்ட காலம் இடம்பெயர்ந்தவர்களை மீள குடியமர்த்தல் கூட்டுறவு அபிவிருத்தி தொழில்பயிற்சி மற்றும் திறனாற்றல் அபிவிருத்தி பதில் அமைச்சர் புத்திக பத்திரன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தற்பொழுது சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு இதற்கான ஆலோசனை வழங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். எதிர்காலத்தில் பால் மா மற்றும் கோதுமை மா நிறுவனங்களுக்கு தாம் விரும்பிய வகையில் விலைகளில் மாற்றங்களை மேற்கொள்வதற்கு முடியாதென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

அதிகரித்த கோதுமை மாவின் விலையை நாளை வரையில் விளக்கி கொள்ளுமாறு தான் இந்த நிறுவனங்களிடம் கேட்டுக்கொண்டதாகவும் விலை அதிகரிப்பு தொடர்பில் அமைச்சரவை மற்றும் வாழ்க்கை செலவு குழுவும் இது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்