வெளிவாரி உள்வாரி பிரித்துப் பார்க்கவில்லை – மகிந்த ராஜபக்ச

  • Editor
  • 24 Jul 2019
  •   Comments Off on வெளிவாரி உள்வாரி பிரித்துப் பார்க்கவில்லை – மகிந்த ராஜபக்ச

ட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுத்தபோது வெளிவாரி உள்வாரி என நாங்கள் பிரித்துப் பார்க்கவில்லை என எதிர் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,அரசாங்கம் பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்க நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளபோதும் வெளிவாரி பட்டதாரிகளை புறக்கணித்திருக்கின்றது.

ஆகவே வெளிவாரி பட்டதாரிகளை நிராகரிப்பது எந்த அடிப்படையில் என்பதை அரசாங்கம் உடனடியாக தெரிவிக்க வேண்டும்.

நாங்கள் 70 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுத்தபோது வெளிவாரி உள்வாரி என பார்க்கவில்லை என்றார்.