கொலை முயற்சி புகார்

  • Editor
  • 28 Jul 2019
  •   Comments Off on கொலை முயற்சி புகார்

தமிழில் மாப்பிள்ளை கவுண்டர், வேதம், மானஸ்தன், ஆதிபகவன் உள்பட பல படங்களில் நடித்தவர் சாக்ஷி சிவானந்த். தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி படங்களிலும்  நடித்துள்ளார்.

அவரது தங்கை ஷில்பா சிவானந்த். இவரும் நடிகைதான். தன்னையும், தனது தாயாரையும் அக்காவின் மாமியார் கொல்ல முயன்றதாக, தனது பேஸ்புக்கில் பரபரப்பான புகார் கூறியுள்ளார் ஷில்பா சிவானந்த்.

அவர் கூறியிருப்பதாவது: ‘சில மாதங்களுக்கு முன் எனது சகோதரியின் மாமியார் பாவனா பிரம்பாஹாட் மீது எனது அம்மா 
பொலிஸில் கொலை முயற்சி புகார் அளித்தார்.

மறுநாளே பாவனா அமெரிக்கா சென்றுவிட்டார். இதுதொடர்பாக மும்பை பொலிஸார் பலமுறை எனது அம்மாவை அழைத்து தகவல் கேட்டு வருகின்றனர். எப்போது இந்தியா வந்தாலும் கொலை முயற்சி வழக்கை நீங்கள் (பாவனா) எதிர்கொள்ள வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.