கோறளைப்பற்று பிரதேச சபயினால் சிறுவர் மற்றும் முதியோர் தினமான இன்று பல நிகழ்வுகள் நடாத்தப்பட்டது.

  • Editor
  • 09 Oct 2019
  •   Comments Off on கோறளைப்பற்று பிரதேச சபயினால் சிறுவர் மற்றும் முதியோர் தினமான இன்று பல நிகழ்வுகள் நடாத்தப்பட்டது.

கோறளைப்பற்று பிரதேசசபையின் எல்லைக்குட்பட்ட வாழைச்சேனை பொதுச் சந்தையில் நாளாந்த வியாபாரத்தில் ஈடுபடும் முதியவர்களை பேணும் நோக்குடன் இன்று சபையின் தவிசாளர் திருமதி ஸோபா ஜெயரஞ்சித் அவர்களினால் தற்காலிக வியாபார நிலையம் அமைத்துக் கொடுக்கப்பட்டதுடன், வியாபாரத்தில் ஈடுபடுவோர் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

தொடர்ச்சியாக மரக்கறி மற்றும் பழ வகைகளை தூரப் பிரதேசங்களில் இருந்து கொண்டுவந்து வியாபரம் செய்யும் இரு முதியோர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்க்கும் முகமாகவே இந்த வியாபார நிலையம் அமைத்துக் கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.