கோறளைப்பற்று பிரதேச சபையின் கீழ் இயங்கும் முன்பள்ளிகளின் மாணவர்களுக்கான சிறுவர் தின கொண்டாட்டங்கள் இரண்டாவது நாளாகவும் (02.10.2019) இடம்பெற்றது.

  • Editor
  • 09 Oct 2019
  •   Comments Off on கோறளைப்பற்று பிரதேச சபையின் கீழ் இயங்கும் முன்பள்ளிகளின் மாணவர்களுக்கான சிறுவர் தின கொண்டாட்டங்கள் இரண்டாவது நாளாகவும் (02.10.2019) இடம்பெற்றது.
கோறளைப்பற்று பிரதேச சபையின் கீழ் இயங்கும் முன்பள்ளிகளின் மாணவர்களுக்கான சிறுவர் தின கொண்டாட்டங்கள் இரண்டாவது நாளாகவும் (02.10.2019) இடம்பெற்றது.

கோறளைப்பற்று பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பிரதேசமான கல்மடு வெம்பில் அமந்துள்ள எம்.ஜே.எப் அறக்கட்டளை நிதியத்தின் கட்டடத் தொகுதியிலேயே இன்றைய நிகழ்வுகள் யாவும் இடம்பெற்றது.

 

இந் நிகழ்வில் கலந்து கொண்ட சிறார்களுக்கா

 

ன விளையாட்டுக்கள், கைவினைப் பொருட்கள் உற்பத்தி தொடர்பான பயிற்சிகளை எம்.ஜே.எப் அறக்கட்டளை நிதியத்தின் பிரதிநிதிகள் வழங்கியதோடு, பெற்றாருக்கான குழந்தை பராமரிப்பு தொடர்பான ஆலோசனைகளையும் வழங்கியிருந்தனர்.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கோறளைப்பற்று பிரதேச சபையின் கெளவ தவிசாளர் திருமதி ஸோபா ஜெயரஞ்சித்தினால் சிறார்களுக்கான பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.