பேத்தாழை பொது நூலகத்தில் சிறுவர் நிகழ்வுகள்

  • Editor
  • 09 Oct 2019
  •   Comments Off on பேத்தாழை பொது நூலகத்தில் சிறுவர் நிகழ்வுகள்
கோறளைப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட பேத்தாழைப் பொது நூலகத்தினால் சர்வதேச சிறுவர் தினம் மற்றும் முதியோர் தினமான இன்று பல நிகழ்வுகள் நடாத்தப்பட்டன.
அவற்றுள் ஒரு நிகழ்வாக பேத்தாழை பொது நூலகத்தின் சிரேஷ்ட வாசகரான திருமதி.தவமணி ஜோசப் அவர்களை வீடு தேடிச் சென்று கெளரவிக்கப்பட்டது.
84 வயதினையுடைய குறித்த வாசகர் தொடர்ச்சியாக பேத்தாழை பொது நூலகத்தினை பயன்படுத்தி வருபவர் என்பதோடு 300 க்கும் மேற்பட்ட புத்தகங்களை இரவல் பெற்று வாசித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
நூலகப் பொறுப்பளர் திருமதி. தங்கத்துரை தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில்  பிரதேச சபையின் தவிசாளர் திருமதி ஸோபா ஜெயரஞ்சித் , பிரதேசசபையின் செயலாளர் திருமதி ப.லிங்கேஸ்வரன், சனசமூக உத்தியோகத்தர் அ.காருன், மற்றும் நூலக உத்தியோகத்தர் கலந்துகொண்டனர்.