திருகோணமலையில் பாடசாலை மாணவன் ஒருவர் கடத்தல், பெற்றோர் முறைப்பாடு.
திருகோணமலையில் பாடசாலை மாணவன் ஒருவர் கடந்த ஞாயிற்று கிழமை வெள்ளை வானில் வந்தவர்களால் கடத்தப்பட்டதாக துறைமுகப் பொலீசீல் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர். குணரெட்ணம் சர்மிளன் என்பவரே கடத்தப்பட்டவர் ஆவார், கந்தசாமி கோவில் வீதியில் உள்ள தனியார் கல்வியகத்திற்கு சென்று வரும் வழியிலேயே இவர் கடத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடடில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா, பம்பைமடு புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்ற 508 பேர் நேற்று முன்தினம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
வவுனியா, பம்பைமடு புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்ற 508 பேர் நேற்று முன்தினம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இது தொடர்பான நிகழ்வின் போது எடுத்தபடம். பிரதியமைச்சர் விஜயமுனி சொய்ஸா, வன்னி மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன உட்பட அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர். இவர்களில் பரீட்சை எழுதிய 246 மாணவர்கள், 50 தம்பதிகளும் அடங்கும்.
ஸ்டாலின் தலைமையிலான தமிழக முதல்வர் அணி ஆஸி. முதல்வர் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சென்னையில் தமிழக முதல்வர் அணி மற்றும் தெற்கு ஆஸ்திரேலிய முதல்வர் அணி இடையே நேற்று நடைபெற்ற நட்புறவு கிரிக்கெட் ஆட்டத்தில் துணை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக முதல்வர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தமிழக முதல்வர் அணியில் ஸ்டாலின் (கேப்டன்),பொன்முடி, ஜித்தன் ரமேஷ்,வெள்ளக்கோயில் சாமிநாதன்,நடிகர் அரவிந்த்,எஸ்.பி.பி. சரண்,ரமணா,துரைமுருகன், ஸ்ரீகாந்த், எல்.சிவராமகிருஷ்ணன், என்.வெங்கட்ராகவன்,அசோக் பொன்முடி,நடிகர் பிரசன்னா,சாக்ஷி சிவா ஆகியோர் பங்குபற்றினர்.
தெற்கு ஆஸ்திரேலிய முதல்வர் அணியில் மைக்ரேன் (கேப்டன்) ,ஏ.கே. தரீன் ,பீட்டர் வர்கீஸ் (இந்தியாவுக்கான தூதர்),பாப் [...]
முதலமைச்சர் சந்திரகாந்தன் மட்டு போதானா வைத்தியசாலைக்குச் திடீர் விஜயம்
முதலமைச்சர் சந்திரகாந்தன் இன்று மட்டு போதனா வைத்திய சாலைக்குச் சென்று நோயாளர்களைப் பார்வையிட்டார்.
விபத்துப் பிரிவுக்குச் சென்ற மாகாண முதலமைச்சர் நோயாளிகளைச் சுகம் விசாரித்ததுடன் நோயாளர்கள் பராமரிக்கப்படும் முறைகள் தொடர்பாகவும் நோயாளர்கள் மற்றும் வைத்திய சாலை நிருவாகத்தினரிடம் கேட்டறிந்து கொண்டார். இங்கு கிழக்கு மாகாண சபை உறுப்பின் பூ. பிரசாந்தனும் சென்றிருந்தார்;
பதுளையில் புதிதாக அமைக்கப்பட்ட கிரிக்கெட் ஸ்டேடியம் ஒன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று திறந்து வைத்தார்.
பதுளையில் புதிதாக அமைக்கப்பட்ட கிரிக்கெட் ஸ்டேடியம் ஒன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று திறந்து வைத்தார்.
இலங்கை கிரிக்கெட் சபையால் அமைக்கப்பட்ட குறித்த ஸ்டேடியத்தை ஜனாதிபதி திறந்து வைத்ததோடு முதல் தடவையாக துடுப்பாட்டத்திலும் ஈடுபட்டார்.
இந்நிகழ்வில் சி.பி ரத்நாயக்க, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, அமைச்சர் டிலான் பெரேரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மட்டு மாநகரம் இருளில் மூழ்கியுள்ளது. - கவலையடைகின்றார் முதலமைச்சர் சந்திரகாந்தன்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் சகல பிரதேசங்களுக்கும் மின்சாரம் வழங்குவதற்கு கிழக்கு மாகாண சபை விசேட திட்டம் ஒன்றினை ஏற்படுத்தி இருக்கின்றது. இது தொடர்பான முக்கிய கூட்டம் இன்று மட்டக்களப்பு கச்சேரியில் இடம்பெற்றது. உதவி அரசாங்க அதிபர் க. விமலநாதன் தலைமையில் இடம் பெற்ற மேற்படி கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே கிழக்கு மாகாண முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்ததார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், இலங்கையில் 18 மாநகரங்கள் இருக்கின்றன. அதிலே இருளில் மிளிர்கின்ற ஒரே ஒரு மாநகர சபை மட்டக்களப்பு [...]
கடத்தப்பட்ட மாநகரசபை உறுப்பினரின் வீட்டிற்கு முதலமைச்சர் சென்றார்.
கடந்த மாதம் 23ந் திகதி மட்டக்களப்பில் வைத்து கடத்தி செல்லப்பட்ட மட்டு மாநகர சபை உறுப்பினர் பிரகாசம் சகாயமணியின் வீட்டிற்கு கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்றுசென்றார். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினரான சகாயமணி கடத்தப்பட்டு இன்றுடன் 13 நாட்களாகின்றன. இதுவரை எதுவித முடிவுகளும் கிடைக்கவில்லை என அவரது வீட்டார் தெரிவித்துள்ளார்கள். இங்கு சென்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரான சிவநேசதுரை [...]
திருமலை ஜனாஸா நலன்புரிச் சங்கமும் பள்ளி வாயல்கள் சம்மேளனமும் இணைந்து முதலமைச்சருக்கு பாராட்டு.
திருமலை ஜனாஸா நலன்புரிச் சங்கமும் திருமலை மாவட்ட பள்ளிவாயல்கள் சம்மேளனமும் இணைந்து கிழக்கு மாகாண மதலமைச்சரின் சேவை நலனைப் பாராட்டி , பராட்டு மடல் வழங்கி கௌரவித்துள்ளார்கள். மேற்படி நிகழ்வானது முதலமைச்சரின் அலவலகத்தில் இடம்பெற்றது.
ஜனாஸா நலன்புரிச் சங்கத்தின் செயலாளர் அல்ஹாஜ்; ஏ. எஸ். ஜவாஹிர், பள்ளிவாயல்கள் சம்மேளனத் தலைவர் அல்ஹாஜ் எம். எப். வளித், மற்றும் எம். எஸ். ஹஸன், ஏ.எச் அஸ்ரப் ஆகியோர் வாழ்த்து மடலை முதலமைச்சர் சந்திரகாந்தனுக்கு வழங்கி வைபபபதனைப் படத்தில் காணலாம்.
வேலையற்ற இளைஞர்களுக்கான சாரதிப் பயிற்சி நெறி முதலமைச்சரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாணத்தில் வேலையற்று இருக்கின்ற இளைஞர் யுவதிகளுக்காக பல்வேறு செயற்றிட்டங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்று முதற்கட்டமாக திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளிப்பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சுமார் 30 இளைஞர்களுக்கு சாரதிப் பயிற்சி செறிக்கான அனுமதிபத்திரங்களை வழங்கிவைத்தார். குச்சவெளி உதவிப் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.கௌரீஸ்வரன் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. முதலமைச்சரின் நிதியின் மூலம் மேற்கொள்ளப்படும் இப் பயிற்சி நெறியினை மடித்து வெளியேறுகின்ற இளைஞர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்ட அவர்களுக்கான வேலைவாய்ப்புக்குளம் பெற்றுக் கொடுக்கப்படும். [...]
கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகமும் கல்வித்திணைக்களமும் இணைந்து நடாத்திய மாபெரும் இப்தார் நிகழ்வு.
கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகமும் கிழக்கு மாகாண கல்வித்திணைக்களமும் இணைந்து நடாத்திய மாபெரும் இப்தார் நிகழ்வு இன்று(04.09.2010) கிண்ணியா மத்திய கல்லூரியில் இடம் பெற்றது. மாகாண கல்விப் பணிப்பாளர் நிஸாம் தலைமையில் இடம்பெற்ற இவ் நிகழ்விற்கு சர்வ மதப்பெரியார்கள் மற்றும் மூவினத்தவர்களும் கலந்து சிறப்பித்தமை விசேட அம்சமாகும். இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண மதலமைச்சர் சி. சந்திரகாந்தன், அனைத்து மதங்களுமே மக்களை நலவழிப்படுத்து வதையே கூறுகின்றது. எனவே அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும். [...]