அறிக்கைகள்


இனவாத சேற்றில் இருந்து மீண்டெழுவோம்.

இனவாதம் என்பது இவ்வுலகிற்கு தந்ததெல்லாம் இழப்புகளும் அழிவுகளுமேயாகும். ஆகவேதான் இன்றைய நவீன உலகு இனவாதம் என்பதை மனித நாகரீகங்களின் எதிரியாக அருவருக்கத்தக்கதொன்றாக பிரகடனப்படுத்தியுள்ளது. இலங்கையை பொறுத்தவரையில் இனவாதமும் இனவெறியுமே பொன்னான இலங்கைத் தீவை பொசுக்கி சாம்பலாக்கியது என்பதை நாம் அறிவோம். சிங்கள இனவாதமும் அதற்கெதிராக தமிழ் உணர்வுகள் தமிழ் இனவாதமாக மாறியதன் காரணமாக இவை எமக்குத் தந்ததெல்லாம் இன்றைய கொடிய யுத்தம் மட்டுமே. எனவே இனவாதம் என்பது எந்தத் தரப்பில் இருந்து எழுந்தாலும் யார் அதைக் கையில் [...]

மக்களின் மனஉணர்வுகளில் இருந்து எழுந்துவரும் மீன்மகள்.

கிழக்குமாகாணம் பல துறைகளிலும் அபிவிருத்தி காணத்தொடங்கியுள்ளது. வீதிகள், பாலங்கள், வீடுகள் என்று கட்டட நிர்மானப் பணிகள் ஒருபுறம் விவசாயம், மீன்பிடி, வேலைவாய்ப்புக்கள் மறுபுறமாக பல்துறைகளிலும் முன்னேற்றத்திற்கான பாதைகள் விரிந்து செல்கின்றன.
போர் நிறுத்தப்பட்டுள்ளது, தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. அபிவிருத்திப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஆனால் ஆயுதங்களுக்கு இன்னும் வேலை முடிந்தபாடில்லை என்பது கவலை தருகின்ற விடயம். ஆள்கடத்தல், கப்பம், கொலைகள் படிப்படியாக குறைந்து கொண்டேவந்தன. ஆனால் அண்மைய ஓரிரு மாதங்களாக வெடிச்சத்தங்கள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இந்த நிலைமையில் எமது [...]