Archive for January 2010

You are browsing the archives of 2010 January.

62 வது சுதந்திர தின வைபவம் கண்டியில்

62 வது சுதந்திர தின வைபவம் கண்டியில்

பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி இலங்கையின் 62 ஆவது சுதந்திர தின வைபவம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கண்டி ஸ்ரீ தலதா மாளிகை பிரதேசத்தில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏகநாயக்க தெரிவித்தார்.
பொலிஸாரினதும் முப்படையினர்களதும் கண் காட்சிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் விசேடமாக இடம் பெறவுள்ளன.
இதேவேளை “தேசத்தின் மகுடம்” கண்காட்சியும் கண்டி பள்ளேகலையில் அன்றைய தினம் ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

நாட்டு மக்களின் நன்றியுணர்வை உலகுக்கு எடுத்துக்காட்டிய வெற்றி

நாட்டு மக்களின் நன்றியுணர்வை உலகுக்கு எடுத்துக்காட்டிய வெற்றி

நாட்டு மக்களின் நன்றி மனப்பான் மையை உலகுக்கு எடுத்துக் காட்டும் வெற்றி இதுவென ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷ தெரி வித்துள்ளார். மீண்டு மொருமுறை தம்மீது நம்பிக்கை வைத்து மகத்தான வெற்றியைப் பெற்றுத்தந்த நாட்டு மக்களுக்கு தமது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்தைத் தோற்கடித்ததன் பின்னர் தேசிய ரீதியில் நடைபெற்ற முதலாவது தேர்தல் இதுவெனக் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி வடக்கு, கிழக்கு உட்பட நாட்டு மக்கள் சகலரும் இவ்வெற்றியில் பங்கேற்றுள்ளனர் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தேர்தல் வெற்றியின் பின்னர் [...]

அன்பின் சமூக உணர்வுள்ள தமிழ் பேசும் வாக்காளப் பெருமக்களே! உங்களுடன் சில நிமிடங்கள்.........

அன்பின் சமூக உணர்வுள்ள தமிழ் பேசும் வாக்காளப் பெருமக்களே! உங்களுடன் சில நிமிடங்கள்………

நடைபெற்று முடிந்த 6வது ஜனாதிபதித் தேர்தலில் கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்களை ஆதரித்து, அவர் ஜனாதிபதியாக முடிசூட வேண்டும் என்ற தூயசிந்தையுடன் அயராது பாடுபட்டு, வாக்களித்த தங்கள் அனைவருக்கும் எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பாகவும், எனது சார்பாகவும் மனம் நிறைந்த நன்றிகளைக் கூறிக்கொள்வதில் பெருமிதம் அடைகின்றேன். காலத்தின் தேவையுணர்ந்து தாங்கள் செயற்பட்டமையினையிட்டு பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
கிழக்கு மாகணத்திற்;கான தெளிவான ஓர் பலமான அரசியல் கட்சியாக
T.M.V.P கட்சி மிளிர்கின்றது. அதன் கொள்கை மற்றும் அக்கட்சி எடுக்கின்ற [...]

பாராளுமன்றத்தைக் கலைக்க ஏற்பாடு: ஓரிரு தினங்களில் அறிவிப்பு வெளியாகும்

பாராளுமன்றம் வெகு விரைவில் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான அறிவித்தல் இன்னும் ஓரிரு வாரங்களில் விடுக்கப்படும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான மைத்திரிபால சிரிசேன தெரிவித்தார்.
ஜனாதிபதிக்கு கிடைக்கப்பெற்ற 60 வீத வாக்குகளை தக்கவைத்துக்கொண்டு எதிர்க் கட்சிக்கு வழங்கப்பட்ட 40 வீத வாக்குகளையும் வெற்றிகொள்ளும் முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பொதுத் தேர்தல் ஒன்றுக்கு முகம் கொடுப்பதற்கு தேவையான நடவடிக் கைகளை உடனடியாக ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் [...]

எதிர்க்கட்சியினருக்கு அரசு அழைப்பு ; கால அவகாசம் வழங்குவதாக தெரிவிப்பு

எதிர்க்கட்சியினருக்கு அரசு அழைப்பு ; கால அவகாசம் வழங்குவதாக தெரிவிப்பு

அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வந்து நாட்டில் நல்லாட்சியொன்றை ஏற்படுத்துவதற்கு எதிர்க்கட்சியினர் அரசாங்கத்துக்குப் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். அதற்காக ஒருவார கால அவகாசம் வழங்கப்படுமென அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
எதிர்க்கட்சி இதற்கு ஒத்துழைப்பு வழங்காத பட்சத்தில் பாராளுமன்றத்தின் மூலம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்று எதிர்கால நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளதெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
தகவல் ஊடகத்துறை அமைச்சில் நேற்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு விளக்க மளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் [...]

பொன்சேகா, தேர்தல் ஆணையாளரை வீட்டு காவலில் வைத்துள்ளதாக கூறும் செய்தி பொய்யானது

எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவையும், தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கவையும் வீட்டுக் காவலில் வைத்திருப்பதாக கூறப்படும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையெனவும் அரசாங்கம் அவற்றை முழுமையாக மறுப்பதாகவும் மனித உரிமைகள் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்றுத் தெரிவித்தார்.
தனது தோல்வியை தாங்கிக் கொள்ள இயலாத பொன்சேகா சர்வதேச ஊடகங்கள் வாயிலாக பொய்ப் பிரசாரங்களைச் செய்து அனுதாபம் தேட முயல்கின்றார். இது போன்ற இழிவான அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலம் நாட்டின் நற்பெயருக்கு கலங்கத்தையும் [...]

1,842, 749 அதிகப்படியான வாக்குகளைப் பெற்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பெருவெற்றி, கிழக்கில் பட்டாசு கொழுத்தி கொண்டாட்டம்.

1,842, 749 அதிகப்படியான வாக்குகளைப் பெற்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பெருவெற்றி, கிழக்கில் பட்டாசு கொழுத்தி கொண்டாட்டம்.

இலங்கையில் நடைபெற்று முடிந்த ஆறாவது ஜனாதிபதி தோ்தலின் சகல மாவட்டங்களின் முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளநிலையில் தற்போதைய ஜனாதிபதியாகவுள்ள மகிந்த ராஜபக்ச போட்டி  வேட்பாளர் சரத் பொன்சேகாவை விட 1,842, 749 அதிகப்படியான வாக்குகளைப் பெற்று பெருவெற்றி பெற்றுள்ளார். ஜனாதிபதியின் அமோக வெற்றியினை கிழக்கு மாகாணம் முழுவதும் பட்டாசு கொழுத்தி கொண்டாடினர்.

கிழக்கு முதல்வர் தனது சொந்த ஊரில் வாக்களிப்பில் ஈடுபட்டார்.

கிழக்கு முதல்வர் தனது சொந்த ஊரில் வாக்களிப்பில் ஈடுபட்டார்.

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இன்று சுமுகமாக ஆரம்பமானது, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தனது வாக்கினை தனது சொந்த ஊரான பேத்தாழை விபுலாநந்தா  வித்தியாலத்தில் வாக்களிப்பதை படங்களில் காணலாம்.

90 பேருடன் கடலில் விழுந்த அடுத்த விமானம் - அனைவரும் பலி

90 பேருடன் கடலில் விழுந்த அடுத்த விமானம் - அனைவரும் பலி

எத்தியோப்பியாவைச் சேர்ந்த விமானம் ஒன்று 90 பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் மத்திய தரைக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. எதியோப்பியன் ஏர்லைன்ஸை சேர்ந்த இந்த விமானம் பெய்ரூட்டிலுள்ள ராஃபிக் ஹரிரி சர்வதேச விமான நிலையத்திலிருந்து எதியோப்பியாவின் தலைநகரான அட்டிஸ் அபாபா நோக்கிச் செல்லும் போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
போயிங் 737-800 மாடலைச் சேர்ந்த இவ் விமானத்தில் 54 லெபனான் மக்கள், 22 எதியோப்பியன்கள் இரு ஆங்கிலேயர்கள்,மற்றும் ஈராக்கியர்,சிரியர்,கனடியர் ரஷ்ஷியர் மற்றும் பிரெஞ்சு நாட்டவர் ஒருவர் ஆகியோர் பயணித்துள்ளனர். விமானம் [...]

தேர்தல் கண்காணிப்பில் 35,000 வெளிநாட்டு, உள்நாட்டு பிரமுகர்கள்

தேர்தல் கண்காணிப்பில் 35,000 வெளிநாட்டு, உள்நாட்டு பிரமுகர்கள்

வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதும் நாளை நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த சுமார் 35 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதற்காக சுமார் ஆயிரம் வாகனங்கள் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுள் பொது நலவாய மற்றும் தெற்காசிய பிராந்தியம் ஆகிய நாடுகளிலிருந்து இலங்கை வந்திருக்கும் 85 க்கு மேற்பட்ட வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தமது பணிகளை ஆரம்பித்திருப்பதாகவும் தேர்தல் திணைக்களம் மற்றும் தனியார் கணிகாணிப்பு அமைப்புக்களின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேர்தல் [...]