Archive for February 2010

You are browsing the archives of 2010 February.

கூடிய விரைவில் வேட்பாளர் விருப்பு இலக்கங்கள்

கூடிய விரைவில் வேட்பாளர் விருப்பு இலக்கங்கள்

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு இலக்க ஒதுக்கீடு தொடர்பான பணியில் தேர்தல்கள் செயலகம் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக அதன் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
வேட்பாளர்களின் விருப்பு இலக்க ஒதுக்கீடு இன்று உத்தியோகபூர்வமாக அனுப்பி வைக்கப்படுமென்று தகவல்கள் வெளியாகியிருந்த போதும் அது தொடர்பான பணிகள் நிறைவு பெறவில்லை.
கூடிய விரைவில் வேட்பாளர் விருப்பு இலக்கங்கள் மாவட்ட ரீதியாக தேர்தல்கள் செயலகத்தினூடாக அனுப்பி வைக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

நபிகள் நாயகம் பிறந்த தினத்தை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை - முதல்வர் பங்கேற்பு.

நபிகள் நாயகம் பிறந்த தினத்தை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை - முதல்வர் பங்கேற்பு.

நபிகள் நாயகம் பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்று(27.02.2010) ஓட்டமாவடி காவத்த முனையில் இடம்பெற்ற சிறப்பு நிகழ்வு ஒன்றில்    கிழக்கு மாகாண முதலமைச்சரும் த.ம.வி.பு கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பங்கு பற்றி சிறப்புரை ஆற்றுவதை படங்களில் காணலாம். இந்நிகழ்வில் முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான அமீர் அலி மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பெரிய நீலாவணை விஸ்ணு மகா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டு போட்டி நிகழ்வில் முதல்வர் பிரதம அதிதியாக பங்கேற்பு.(படங்கள் இணைப்பு)

பெரிய நீலாவணை விஸ்ணு மகா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டு போட்டி நிகழ்வில் முதல்வர் பிரதம அதிதியாக பங்கேற்பு.(படங்கள் இணைப்பு)

நேற்று(27.02.2010) கல்முனை, பெரிய நீலாவணை விஸ்ணு மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு விளையாட்டுப் போட்டி நிகழ்வில் கிழக்கு மாகண முதலமைச்சரும் த.ம.வி.பு கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பிப்பதையும், போட்டியில்; வெற்றி பெற்ற இல்லத்திற்கு வெற்றி கேடயத்தை வழங்குவதையும் படங்களில் காணலாம்.

வெற்றுக் கோஷமிடும் கூட்டமைப்பினர்.

வெற்றுக் கோஷமிடும் கூட்டமைப்பினர்.

பல புதிய முகங்களுடன் தேர்தல் களத்தில் குதித்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமை ப்பு ஜனநாயக வழியில் இனவிடுதலையை வென்றெடுக்கத் தமிழ் மக்கள் ஆணை வழ ங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றது. அதேநேரம் தமிழ் மக்களின் அரசியல் நலனுக்காக ஆளு மையுடன் செயற்படப் போவதாகவும் கூறுகின்றது. கேட் பதற்கு நன்றாகத் தான் இருக்கின்றது. ஆனால் ஆறு தசாப்தங்களாகக் கேட்டுக் கேட்டுப் புளித்துப் போன வசனங்கள்.
தமிழரசுக் கட்சியிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமை ப்பு வரை எல்லாத் தலைவர்களும் ஒவ்வொரு [...]

வேட்பு மனுக்களை ஏற்கும் பணி இன்று நண்பகலுடன் நிறைவு:

வேட்பு மனுக்களை ஏற்கும் பணி இன்று நண்பகலுடன் நிறைவு:

பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக் களைத் தாக்கல் செய்யும் பணிகள் இன்று (26) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைகின்றன.
இன்றைய தினம் 200 இற்கும் அதிகமான சுயேச்சைக் குழுக்களும், அரசியல் கட்சிகளும் தமது வேட்பாளர் நியமனப்பத்திரங்களைத் தாக்கல் செய்து முடிக்கின்றன. இதனால் ஏற்படும் பரபரப்பை சமாளிக்கும் வகையில், மாவட்டச் செயலகங்கள் அமைந்துள்ள பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளும் பணிகள் கடந்த 19ஆம் திகதி ஆரம்பமானதிலிருந்து நேற்று வரை அரசியல் கட்சிகள் ஒரு சில மாவட்டங்களுக்கான வேட்புமனுக்களையே [...]

த.ம.வி.பு(TMVP)கட்சி இன்று மட்டக்களப்பில் வேட்பு மனு தாக்கல் (படங்கள் இணைப்பு

த.ம.வி.பு(TMVP)கட்சி இன்று மட்டக்களப்பில் வேட்பு மனு தாக்கல் (படங்கள் இணைப்பு

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான TMVPயின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பு மனு இன்று காலை 10 மணியளவில் கட்சி தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் செயலாளர் எட்வின் சில்வா கைலேஸ்வரராஜா, மட்டக்களப்பு மாவட்ட த.ம.வி.பு(TMVP) கட்சியின் தலைமை வேட்பாளர்          அ.செல்வேந்திரன் ஆகியோரால் இன்று கையளித்தார்கள். காலை 8 மணியளவில் மட்டக்களப்பு மாமாங்க ஈஸ்வர ஆலயத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான த.ம.வி.பு(TMVP) கடசியின் சாரபில் போட்டியிடுகின்ற அனைத்து வேட்பாளர்களும் கட்சியின் உயர் மட்ட உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் தொண்டர்கள் என [...]

சரத் பொன்சேகாவுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின்கீழ் வழக்கு

சரத் பொன்சேகாவுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின்கீழ் வழக்கு

 இரு வாரங்களில் சட்டமா அதிபரினால் தாக்கல்
ஓய்வுபெற்ற இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிராக எதிர்வரும் இரு வாரங்களில் குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்படும். சட்ட மா அதிபரினால் மேல் நீதிமன்றத்தில் இவருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட உள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.
தகவல் திணைக்களத்தில் நேற்று (25) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலே அமைச்சர் மேற்கண் டவாறு கூறினார். அமைச்சர் மேலும் [...]

மும்பை தாக்குதலுக்குப் பின்னர் முதல் முறையாக இந்தியா பாக் இடையிலான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை இன்று ஆரம்பம்.

மும்பை தாக்குதலுக்குப் பின்னர் முதல் முறையாக இந்தியா பாக் இடையிலான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை இன்று ஆரம்பம்.

மும்பை தாக்குதலுக்குப் பின்னர் முதல் முறையாக இந்தியா இடையிலான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை இன்று காலை டில்லியில் ஆரம்பமானது.
இந்தப் பேச்சுவார்த்தையில் வெளியுறவு செயலாளர் நிரூபமா ராவ் தலைமையிலான இந்தியக் குழுவும், பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர் சல்மான் பஷீர் தலைமையில் அந்த நாட்டுக் குழுவும் பங்கேற்றன.
மும்பை தாக்குதல் நடந்து 14 மாதங்கள் கழிந்துள்ள நிலையில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
டில்லி ஹைதராபாத் இல்லத்திற்குப் பேச்சுவார்த்தைக்காக வந்த பஷீர் தலைமையிலான பாகிஸ்தான் குழுவினரை நிரூபமா ராவ் வரவேற்று அழைத்துச் சென்றார்.
இரு நாடுகளுக்கும் இடையே [...]

சாரணியத்தின் தந்தை பேடன் பவல் காட்டிய வழியை சிறப்பாகக் கொண்டுசெல்ல யாவரும் உழைக்க வேண்டும். கிழக்கு மாகாண முதலமைச்சர்.

சாரணியத்தின் தந்தை பேடன் பவல் காட்டிய வழியை சிறப்பாகக் கொண்டுசெல்ல யாவரும் உழைக்க வேண்டும். கிழக்கு மாகாண முதலமைச்சர்.

போர்ச் சூழல் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலங்களில் சாரணிய அமைப்பின் செயற்பாடுகள் பின்னடைவைச் சந்தித்திருக்கலாம். ஆனால் இன்று அமைதிச் சூழல் ஏற்பட்டுள்ளமையால் மனித சமுதாயத்திற்கு சிறந்த வழிமுறைகளைப் போதிக்கும் சாரணியத்தின் செயற்பாட்டை விஸ்த்தரித்து, சாரணியத்தின் தந்தை பேடன் பவல் காட்டிய வழியை சிறப்பாகக் கொண்டுசெல்ல யாவரும் உழைக்க வேண்டும்.
இவ்வாறு கிழக்கு மாகாண முதலமைச்சரும் த.ம.வி.பு கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் குறிப்பிட்டார். மட்டக்களப்பு மாவட்ட சாரணர் சங்கம் ஏற்பாடு செய்து நடாத்திய உலக சாரணர் தந்தை [...]

த.ம.வி.பு கட்சி வன்னி மற்றும்  யாழ் மாவட்டங்களுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று (படங்கள் இணைப்பு)

த.ம.வி.பு கட்சி வன்னி மற்றும் யாழ் மாவட்டங்களுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று (படங்கள் இணைப்பு)

த.ம.வி.பு கட்சி எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வடக்கிலும் தமது பிரதிநிதிகளை நிறுத்துவதற்காக வேட்புமனுத்தாகல் செய்ய கட்சிய் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான பிரதிநிதிகள் யாழ் மாவட்ட  செயலகத்திற்கு சென்றபோது பிடிக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்த பின்பு யாழ்பாணம் நல்லூர் கந்த சுவாமி கோயிலில் வழிபாடுகளில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.