Archive for February 1st, 2010
You are browsing the archives of 2010 February 1.
You are browsing the archives of 2010 February 1.
அரசாங்த்தால் புனர்வாழ்வளிக்கப்பட்ட 56 முன்னாள் புலி உறுப்பினர்கள் நேற்று பெற்றேர்களிடம் கையளிக்கப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
புலிகள் இராணுவரீதியில் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அரசாங்கத்திடம் சரணடைந்த புலி உறுப்பினர்கள் வெலிகந்த மற்றும் நவசென்புர ஆகிய இடங்களிலுள்ள புனர்வாழ்வு முகாம்களில் தொழில் பயிற்சியளிக்கப்பட்டனர்.
புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஆர்.எம். தயா ரத்நாயக்க தலைமையில் நடைபெற்ற வைபவமொன்றில் புனர்வாழ்வுப் பயிற்சிகள் வழங்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் தத்தமது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்திய மாணவர்கள் மீது தொடர்ந்து இனவெறி தாக்குதல் நடத்தி வருவதால், இந்திய&ஆஸ்திரேலிய உறவில் விரிசல் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து நகரம், இந்தியா&ஆஸ்திரேலியா இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் புதிய இணையதளத்தை தொடங்கியுள்ளது.
குயின்ஸ்லாந்தில் தனது மண்டல அலுவலகத்தை திறந்துள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான தனுஷ் இன்போடெக் மற்றும் இப்ஸ்விச் நகராட்சி ஆகியவை இணைந்து இதை உருவாக்கி உள்ளன. இருதரப்பு உறவுகள், இரு நாடுகளைச் சேர்ந்த மக்களின் அனுபவங்கள் குறித்த பல்வேறு [...]
பங்களாதேஷின் டாக்கா நகரில் நடைபெறும் 11வது தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை நேற்று பளுதூக்கல் போட்டிகளில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றது. 56 கிலோ கிராம் எடைப் பிரிவில் பளுதூக்கிய இலங்கை வீரர் கமல் பண்டார இலங்கையில் முதல் தங்கப் பதக்கத்தை வென்றார்.பளுதூக்கல் போட்டியில் பங்குபற்றிய மற்றொரு வீரரான சிந்தன விதானகே தனது பாரப் பிரிவில் இலங்கைக்கான இரண்டாவது தங்கப் பதக்கத்தை வென்றார்.இதேவேளை ஆண்களுக்கான ஜூடோ போட்டியில் இலங்கை வீரர்களான துஷித ரங்க பெர்ணாண்டோ மற்றும் தேவாலகே [...]