Archive for February 4th, 2010
You are browsing the archives of 2010 February 4.
You are browsing the archives of 2010 February 4.
மன்முனைப்பற்று பிரதேச செயலாளர் அமலநாதன் தலைமையில் இடம்பெற்ற சுதந்திரதின நிகழ்வில் கலந்து கொண்ட கிழக்கு மகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அப்பிரதேசத்தை அண்டிய வறிய மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகளை வழங்குவதை படங்களில் காணலாம், இந்நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், பிரதேச சபை தவிசாளர் கிருஸ்டினா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இன்று இலங்கையின் 62வது சுதந்திர தினம் கொண்டாட்டம் நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதனடிப்படையில் கிழக்கு மாகாணத்திலும், மட்டக்களப்பு மாவட்டத்திலும் கொண்டாடப்பட்டது. மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி முதல்வர் ஜோர்ச் பிள்ளை தலைமையில் மாநகர வளாகத்தில் நடைபெற்ற சுதந்திரதின கொண்டாட்ட நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றிவைத்து உரையாற்றும்போது, பாரிய சவால்களுக்கு மத்தியில் இன்று மீண்டும் ஒரே [...]
“இலங்கையின் ஜனாதிபதி வரலாற்றில் அதிஷ்டமுள்ள ஜனாதிபதி நானே என்பதில் பெருமை கொள்கிறேன்.
அரசியல்வாதிகள் மக்களை ஒரு போதும் தவறான பாதையில் வழிநடத்தக் கூடாது. நான் நாட்டைக் காட்டிக் கொடுப்பதற்கான எந்த முயற்சிகளிலும் ஈடுபடவில்லை. இனியும் அவ்வாறான செயலை செய்ய மாட்டேன்” என இன்று இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சுதந்திர தின வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
“இந்த நாட்டில் வாழ்கின்ற மக்கள் அனைவரும் மன்னர்களே. 30 வருட காலத்தில் இந் நாட்டில் மக்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை இருந்தது. [...]
இலங்கை நாடு காலணித்துவ ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்று 62வது சுதந்திர நிகழ்வினை கொண்டாடுகின்ற இவ் வேளையில், எம் நாடடின் சுதந்திரத்திற்காக சொந்த விருப்பு வெறுப்புக்களை மறந்து போராடிய அனைத்து உத்தம உள்ளங்களையும் நினைவுகூர வேண்டியது ஒவ்வொருவரினதும் கடமையாகும். நாடு சுதந்திரமடைந்து சுபீட்ச பாதையில் சுய ஆட்சியின் கீழ் கொண்டு வருவதற்காக உயிர் ,உடமைகளை அர்ப்பணித்தவர்கள் தமிழ், முஸ்லிம்,சிங்களம் என வேற்றுமை பார்க்கவில்லை. இதே போல் பல்லின சமுதாயக் கட்டமைப்பைக் கொண்ட இலங்கைத் திருநாட்டில் உள்ள ஒவ்வொருவரும் [...]