Archive for February 5th, 2010

You are browsing the archives of 2010 February 5.

கன்னித்தன்மையை ஏலம் விட்ட நியூசி பெண் – 36,000 டாலருக்கு ஏலம் போனார்!

கன்னித்தன்மையை ஏலம் விட்ட நியூசி பெண் – 36,000 டாலருக்கு ஏலம் போனார்!

நியூசிலாந்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் தனது கன்னித்தன்மையை ஏலத்திற்கு விட்டார். அதை ஒருவர் 36,000 டாலருக்கு ஏலம் கேட்டார். அதை இந்தப் பெண் ஏற்றுக் கொண்டுள்ளார்.
அவர் நார்த்லேன்ட் பகுதியைச் சேர்ந்த 19 வயது மாணவி. தன்னை யுனிகேர்ள் என்று பெயரில் அடையாளம் காட்டியுள்ளார். முழு விவரங்களை வெளியிடவில்லை. நியூசிலாந்தைச் சேர்ந்த ஒரு இணையதளத்தில், தனது படிப்புச் செலவுக்காக, தான் பாதுகாத்து வரும் கன்னித்தன்மையை ஏலம் விடுவதாக அறிவித்திருந்தார்.
இந்த ஏலம் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாம். இதுகுறித்து அந்தப் பெண் [...]

தப்பிச் சென்ற இராணுவத்தினரை கைது செய்யும் நடவடிக்கை ஆரம்பம்

தப்பிச் சென்ற இராணுவத்தினரை கைது செய்யும் நடவடிக்கை ஆரம்பம்

இராணுவத்திலிருந்து தப்பிச் சென்று குறித்த கால எல்லை க்குள் சரணடையாத இராணு வத்தினரை தேடி கைது செய்யும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
இராணுவத்திலிருந்து தப்பி ஓடியவர்கள் சுதந்திரத் தினத்தன்று சரணடையும் பட்சத்தில் பொது மன்னிப்பு வழங்கப்படும் என்று இரா ணுவம் விசேட அறிவிப்பு ஒன்றை நேற்று முன்தினம் விடுத்தி ருந்தது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு வழங்கப்பட்ட விசேட காலக்கெடு நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்த நிலையிலேயே சரணடையாதவர்களைத் தேடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள் [...]

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு: 1576 கைதிகள் விடுதலை

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு: 1576 கைதிகள் விடுதலை

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள 37 சிறைச்சாலைகளைச் சேர்ந்த 1576 கைதிகள் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையின் 62வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கிய பொது மன்னிப்பின் அடிப்படையிலேயே 1576 கைதிகளும் விடுதலை செய்யப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளரும், ஊடகப் பேச்சாள ருமான கெனட் பெர்னாட்டோ தெரிவித்தார்.
இந்த பொது மன்னிப்பு பெற்றவர்களில் அதிகமானவர்கள் சிறு சிறு குற்றச்செயல்கள் காரணமாகவும், தண்டப் பணம் செலுத்த முடியாமல் இருந்தவர்களும் ஆவர்.
37 சிறைச்சாலைகளிலிருந்து விடுதலை செய்யப்பட்ட போதிலும் [...]