Archive for February 7th, 2010

You are browsing the archives of 2010 February 7.

இலங்கைக்கு நேற்று ஐந்து தங்கப் பதக்கங்கள்

இலங்கைக்கு நேற்று ஐந்து தங்கப் பதக்கங்கள்

பங்களாதேஷின் தலைநகரான டாக்காவில் நடைபெற்று வரும் 11 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை நேற்று 5 தங்கப் பதக்கங்களை சுவீகரித்தது.
ஆண்களுக்கான 4×100 மீட்டர் அஞ்சலோட்டம், பெண்களுக்கான4×100 மீட்டர் அஞ்சலோட்டம், பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டம், ஆண்களுக்கான கராட்டே. பெண்களுக்கான உயரம் பாய்தல் ஆகிய போட்டிகளிலேயே இலங்கை நேற்று தங்கப் பதக்கங்களை சுவீகரித்தது.
போட்டியின் 9 வது நாளான நேற்று பதக்கப் பட்டியலில் இந்தியா 67 தங்கம் 39 வெள்ளி 22 வெண்கலம் என மொத்தம் 128 பதக்கங்களுடன் [...]

ஜனாதிபதி மஹிந்தவுக்கு டொக்டர் பட்டம்; ரஷ்ய பல்கலைக்கழகம் கெளரவம்

ஜனாதிபதி மஹிந்தவுக்கு டொக்டர் பட்டம்; ரஷ்ய பல்கலைக்கழகம் கெளரவம்

உலக சமாதானத்துக்கு ஆற்றிய சீரிய பங்களிப்பு, பயங்கரவாதத்தை முறியடித்தமை மற்றும் இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் கல்வி, கலாசாரம் உட்பட பல்வேறு துறைகளில் பங்களிப்பு செய்தமைக்காகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ரஷ்யாவின் மொஸ்கோ நட்புறவு (பட்ரிக் லுமும்பா) பல்கலைக்கழகம் விசேட கெளரவ டொக்டர் பட்டமொன்றை வழங்கி கெளரவித்துள்ளது.
ரஷ்யாவின் தலைநகரான மொஸ்கோவில் கிரெம்ளின் மண்டபத்தில் வைத்து நட்புறவு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பிலிபோவ் இந்த கெளரவ டொக்டர் பட்டத்தை நேற்று முன்தினம் ஜனாதிபதிக்கு வழங் கினார். மொஸ்கோவின் ‘பட்ரிக் லுமும்பா’ பல்கலைக்கழகம் [...]

உள்நாட்டு பாதுகாப்பை பலப்படுத்த இந்திய மத்திய, மாநில அரசு கூட்டு நடவடிக்கை!

உள்நாட்டு பாதுகாப்பை பலப்படுத்த இந்திய மத்திய, மாநில அரசு கூட்டு நடவடிக்கை!

தீவிரவாத ஊடுருவல், தீவிரவாத தாக்குதல், பொருளாதாரத்தை சீர்குலைக்க கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுதல் என நாட்டின் பாதுகாப்புக்கு ஏராளமான அச்சுறுத்தல்கள் உள்ளன. மத்திய அரசும் மாநில அரசுகளும் இணைந்து கூட்டு நடவடிக்கைகள் எடுத்து இந்த அச்சுறுத்தல்களை முறியடிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
நாட்டில் பருப்பு வகைகள், சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விலை கடந்த சில மாதங்களாக அதிகளவில் உயர்ந்துள்ளது.
இதையடுத்து, நாட்டின் பொருளாதார நிலை, விலைவாசியை கட்டுப்படுத்துதல், உணவு தானிய உற்பத்தி, உள்நாட்டு [...]