Archive for February 8th, 2010

You are browsing the archives of 2010 February 8.

மீண்டும் தலைதூக்கியுள்ள டெங்கு அபாயம்!

மீண்டும் தலைதூக்கியுள்ள டெங்கு அபாயம்!

நாடெங்கும் டெங்குக் காய்ச்சல் மீண்டும் தீவிரமாகப் பரவி வருகிறது. கடந்த வருடத்தில் டெங்கு நோய் மோசமாகப் பரவியிருந்தது. டெங்கு நோய்க்குள்ளாகி கடந்த வருடம் மரணமடைந்தோரின் எண்ணிக்கை முந்நூறுக் கும் மேலானதாகும். அதேசமயம் கடந்த வருடத்தில் இந்நோயினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை முப்பத்து நாலாயிரத்தையும் தாண்டியிருந்தது.
கடந்த வருட இறுதியில் இந்நோயின் தாக்கம் சற்றுத் தணிந்தி ருந்த போதிலும், இவ்வருடம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் மாத்திரம் டெங்கு நோயினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இருபத்தைந்து ஆகும். நோயினால் பீடிக்கப்பட்டோர் மூவாயிரத்தையும் [...]

வடக்கு அரச நிறுவனங்களில் மும்மொழி பெயர்ப் பலகை

ரூ. 75 இலட்சம் அமைச்சு ஒதுக்கீடு
வடக்கிலுள்ள சகல அரசாங்க நிறுவனங்களிலும் மும்மொழிகளிலும் பெயர்ப் பலகைகளை தொங்க விடுவதற்காக நிதி ஒதுக்கியுள்ளதாக அரசியல் விவகார தேசிய நல்லிணக்க அமைச்சர் நேற்று தெரிவித்தது.
இதன்படி வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் அரச நிறுவனங்களில் மும்மொழிகளிலும் பெயர்ப்பலகைகள் பொருத்தப்பட்டு வருவதாக அமைச்சு செயலாளர் திருமதி எம். எஸ். விக்ரமசிங்க தெரிவித்தார்.
மும்மொழிகளிலும் பெயர்ப்பலகைகளை பொருத்த 75 இலட்சம் ரூபா வழங்கப்பட்டு [...]

எனக்கு வழங்கிய டொக்டர் பட்டம் இலங்கை மக்கள் அனைவருக்கும் கிடைத்த வெற்றி:மொஸ்கோவில் ஜனாதிபதி

எனக்கு வழங்கிய டொக்டர் பட்டம் இலங்கை மக்கள் அனைவருக்கும் கிடைத்த வெற்றி:மொஸ்கோவில் ஜனாதிபதி

ரஷ்யாவின் நட்புறவு பல்கலைக்கழகம் எனக்கு வழங்கிய டொக்டர் பட்டம் எனக்கு கிடைத்த தனிப்பட்ட வெற்றி அல்ல. அது இலங்கை மக்கள் அனைவருக்கும் கிடைத்த பொதுவான வெற்றியாகும். என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ரஷ்யாவில் தெரிவித்தார்.
ரஷ்யாவின் நட்புறவு (லுமும்பா) பல்கலைக்கழகம் ஜனாதிபதிக்கு கௌரவ டொக்டர் பட்டம் வழங்கி கௌரவித்ததையடுத்து உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது:-
“இந்தப் பட்டம் வழங்கப்படுவதற்கு உலக சமாதானத்துக்கு நாம் ஆற்றிய பங்களிப்பே காரணம் என்று பட்டம் வழங்கல் தொடர்பான குறிப்பில் கூறப்பட்டுள்ளது.முழு [...]