Archive for March 4th, 2010
You are browsing the archives of 2010 March 4.
You are browsing the archives of 2010 March 4.
நேற்று (03.03.2010) கல்குடா கல்வி வலைய பாடசாலையான கல்மடு விவேகானந்தா வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுக்கான விளையாட்டு போட்டி நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சரும் த.ம.வி.பு கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொண்டு சிறப்பிப்பதையும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களை வழங்குவதையும் படங்களில் காணலாம்.
பொதுத்தேர்தலில் வாக்களிப்பதற்குத் தகுதிபெற்றுள்ள ஒருகோடியே 88 லட்சத்து 44 ஆயிரத்து 500 பேருக்கான வாக்காளர் அட்டைகளும் அச்சடிப்பதற்காக அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனத்திடம் ஒரேநாளில் கையளிக்கப்பட்டுள்ளன என்று தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
வாக்காளர் அட்டைகளை அச்சடிக்கும் நடவடிக்கைகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியிலேயே மேற்கொள்ளப்படுகின்றது. அதேவேளை, ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற பொதுத்தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு எதிர்வரும் 25,26 ஆம் திகதிகளில் நடைபெறும்.
வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கப்பட்டதன் பின்னர் அவற்றை ஒரே நாளில் தபால் திணைக்களத்திடம் கையளிப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி தேர்தலின் [...]
இந்தியாவில் பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றான அண்ணணாமலைப் பல்கலைக்கழகம் இலங்கையலும் தனது கல்விச் சேவையினை விஸ்த்தரிக்கின்றது. இதன் முதற் கட்டமாக கிழக்கு மையத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் பணியினை இன்று (03.03.2010)உத்தியோக பூர்வமாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆரம்பித்து வைத்தார்.
பேராசிரியர் எஸ்.சச்சிதானந்தம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய முதல்வர் சந்திரகாந்தன் பல்கலைக்கழகத்தின் அனுமதி கிடைக்காத மாணவர்கள் தமது பட்டப்படிப்பினை மேற்கொள்வதற்கு இது ஓர் சந்தர்ப்பமாக அமையும். இவ்வளவு காலமும் கல்வித்துறையில் பின்நோக்கிச் சென்றிருந்த [...]