Archive for March 5th, 2010
You are browsing the archives of 2010 March 5.
You are browsing the archives of 2010 March 5.
இந்திய கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 5 பேரை இந்திய கடலோர காவல்படையினர் கைது செய்துள்ளனர்.
தென் கிழக்கு கடலோர பகுதியில் ரோந்து பணியில் இந்திய கடலோர காவல்படையினர் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது நாகப்பட்டிணம் கடலோர பகுதியில் அத்துமீறி மீன்பிடித்து கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 5 பேரை இந்திய கடலோர காவல்படையினர் சுற்றி வளைத்து பிடித்தனர்.
பின்னர் அவர்கள் 5 பேரும் இன்று மண்டபம் கôவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உலக கோப்பை ஹாக்கி லீக் போட்டியில் இந்திய அணி 2-5 என்ற கோல் கணக்கில், ஸ்பெயின் அணியிடம் போராடி தோல்வியடைந்தது. இதன்மூலம் உலக கோப்பை தொடரின் அரையிறுதிக்கு முன்னேறும் இந்திய அணியின் கனவு, கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது.
டில்லியில் உள்ள தயான்சந்த் தேசிய மைதானத்தில் 12வது உலக கோப்பை ஹாக்கி தொடர் நடக்கிறது. இதில் நேற்று நடந்த “பி’ பிரிவு லீக் போட்டியில் இந்திய அணி, உலகின் “நம்பர்-3′ அணியான ஸ்பெயின் அணியை எதிர்கொண்டது. முதல் போட்டியில் பாகிஸ்தானை [...]
மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடையவர்கள் என்று கூறி 20 பேரின் பெயர் அடங்கிய பட்டியலை பாகிஸ்தான் வெளியிட்டுள்ளது.
மும்பை தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவர்களில் கசாப் மட்டுமே உயிருடன் சிக்கினான். மற்ற 9 தீவிரவாதிகள் கொல்லப்பட்டு விட்டனர்.
இவர்களை ஏவி விட்டு பயங்கரவாத செயலை அரங்கேற்றிய லஷ்கர் தலைவர் ஹபீஸ் சயீத், லக்வி உள்ளிட்ட பலரின் தொடர்புகள் குறித்த ஆதாரங்களை பாகிஸ்தானுக்கு இந்தியா பலமுறை கொடுத்தும், அவர்கள் குறித்து பாகிஸ்தான் கண்டு கொள்ளாமலேயே இருக்கிறது.
இந்த நிலையில் மும்பைத் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறி [...]
நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் T.M.V.P கட்சியானது கிழக்கு மாகாணத்தில் மாத்திரமன்றி தமிழ் மக்கள் வாழ்கின்ற குறித்த சில வெளி மாகாணங்களிலும் அதாவது வட மாகாணம் மற்றும் பொலநறுவை மாத்தறை போன்ற மாவட்டங்களிலும் போட்டியிடுகின்றது. கிழக்கு மாகாணத்திலே மட்டக்களப்பு திருகோணமலை அம்பாறை ஆகிய மாவட்டங்களில் மிகவும் பலத்த போட்டிகளுக்கு மத்தியில் போட்டியிடுகின்றது.
அம்பாறை மாவட்டத்தில் த.ம.வி.பு கட்சியானது மாவட்ட அமைப்பாளர் வி.சத்தியசீலன் தலைமையில் போட்டியிடுகின்றது. அம்பாறை மாவட்டத்திற்கான த.ம.வி.பு கட்சியின் தேர்தல் பிரச்சாரமானது மிகவும் தீவிரமாக இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. கட்யின் [...]