Archive for March 6th, 2010

You are browsing the archives of 2010 March 6.

ஐ.நா நிபுணத்துவக் குழு தேவையற்றது; பான்கீ மூனிடம் ஜனாதிபதி தெரிவிப்பு

ஐ.நா நிபுணத்துவக் குழு தேவையற்றது; பான்கீ மூனிடம் ஜனாதிபதி தெரிவிப்பு

இலங்கையின் யுத்தக் குற்றங்கள் பற்றி ஆராய்வதற்காக நிபுணர்கள் குழுவொன்றை ஐ. நா. செயலாளர் நாயகம் நியமிக்கத் தீர்மானித்துள்ளதை இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவது தேவையற்றதும், விரும்பத்தகாததுமான செயலென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
ஐ. நா. செயலாளர் நாயகம் பான்கீமூன் நேற்று முன்தினம் (வெள்ளி) தொலைபேசி மூலம் ஜனாதிபதியுடன் தொடர்புகொண்டு பேசினார். அதன்போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது ஆட் சேபனையைத் தெரிவித் தாரென ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இலங்கை விவகாரம் தொடர்பாக ஆராய நிபுணர்கள் [...]

சுவாமி விபுலானந்தர் நினைவு இல்லத்தை முதல்வை பார்வையிட்டார். (படங்கள் இணைப்பு)

சுவாமி விபுலானந்தர் நினைவு இல்லத்தை முதல்வை பார்வையிட்டார். (படங்கள் இணைப்பு)

கிழக்கு மாகாண முதலமைச்சரும் த.ம.வி.பு கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்று சுவாமி விபுலானந்தரின் காரைதீவில் அமைந்துள்ள நினைவு இல்லத்தை நேரில் சென்று பார்வையிட்டார் அதன்போது சுவாமி விபுலானந்தர் இராணுவ வீரராக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை முதல்வர் பார்வையிடுவதையும் படங்களில் காணலாம்.

 

அம்பாறை தமண பிரதேச சபைக்கு உழவு இயந்திரம் முதல்வரால் அன்பளிப்பு.

அம்பாறை தமண பிரதேச சபைக்கு உழவு இயந்திரம் முதல்வரால் அன்பளிப்பு.

இன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அக்கரைப்பற்றில் அமைந்துள்ள கிழக்கு மாகாண சபை உப அலுவலகத்தில் வைத்து  தமண பிரதேச சபைக்கான உழவு இயந்திரத்தினை தவிசாளர் விபுல ரத்நாயக்கவிடம் கையளித்தார், இந்நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான சோ.புஸ்ப்பராசா, பூ.பிரசாந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.