இந்தியாவின் பிரசித்தி பெற்ற வீரர்கள் வரிசையில் சச்சின் முதலிடம்
ஆங்கில வார பத்திரிகை ஒன்று இந்திய விளையாட்டில் சிறப்பான வீரர்கள் 50 பேரின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
உலகின் தலை சிறந்த துடுப்பாட்ட வீரர், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திரம் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார்.
ஐ.பி.எல். போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி 20க்கு இருபது ஓவர் போட்டியை பிரபல்யம் அடைய வைத்த லலித்மோடி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
பெங்களூர் ராயல் சலஞ்சர்ஸ் அணி உரிமையாளரும் போர்ஸ் இந்தியா உரிமையளாருமான விஜய் மல்லையா 3-வது இடத்தை பிடித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி கப்டன் டோனி 5-வது இடத்தில் உள்ளார். இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் சுரேஷ்கல்மாடி 12-வது இடத்தில் உள்ளார்.
கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி உரிமையாளரும் நடிகையுமான பிரீத்தி ஜிந்தா 23-வது இடத்திலும் சானியா மிர்சா 50-வது இடத்திலும் உள்ளனர். , , ,