இலங்கைக்கு நேற்று ஐந்து தங்கப் பதக்கங்கள்

s-flag1பங்களாதேஷின் தலைநகரான டாக்காவில் நடைபெற்று வரும் 11 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை நேற்று 5 தங்கப் பதக்கங்களை சுவீகரித்தது.

ஆண்களுக்கான 4×100 மீட்டர் அஞ்சலோட்டம், பெண்களுக்கான4×100 மீட்டர் அஞ்சலோட்டம், பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டம், ஆண்களுக்கான கராட்டே. பெண்களுக்கான உயரம் பாய்தல் ஆகிய போட்டிகளிலேயே இலங்கை நேற்று தங்கப் பதக்கங்களை சுவீகரித்தது.

போட்டியின் 9 வது நாளான நேற்று பதக்கப் பட்டியலில் இந்தியா 67 தங்கம் 39 வெள்ளி 22 வெண்கலம் என மொத்தம் 128 பதக்கங்களுடன் முதல் இடத்திலும் பாகிஸ்தான் 17 தங்கம் 23 வெள்ளி 27 வெண்கலம் என மொத்தம் 67 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும், பங்களாதேஷ் 14 தங்கம் 19 வெள்ளி 44 வெண்கலம் என மொத்தம் 77 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்திலும் இலங்கை 12 தங்கம் 26 வெள்ளி 35 வெண்கலம் என மொத்தம் 73 பதக்கங்களுடன் நான்காவது இடத்திலும் உள்ளன.