இராக் நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்தது.

_47427034_008903107-11இராக் நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குபதிவு ஞாயிற்றுக்கிழமையன்று முடிவடைந்தது. அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு படைகள் இராக்கிற்குள் 7 வருடங்களுக்கு முன்னர் நுழைந்த பின்னர் நடத்தப்படும் இரண்டாவது வாக்களிப்பு இதுவாகும்.

கணிசமான இராக்கியர்கள் தேர்தலில் வாக்களித்ததாக இராக்கின் பல நகரங்களில் இருக்கும் பிபிசி செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மக்கள் வாக்களிக்க செல்வதை ஊக்குவிக்கும் முகமாக கார் போக்குவரத்து மீதான தற்காலிக தடையை அதிகாரிகள் அகற்றியிருந்தனர்.

இதற்கிடையே, கிளர்ச்சியாளர்களின் பல தொடர் தாக்குதல்களில் மொத்தம் 35 பேர் கொல்லப்பட்டிருந்தாலும், தேர்தல் நடைபெற்று முடிந்தது.

தலைநகர் பாக்தாத்தில் குண்டுத்தாக்குதல் ஒன்றில் அடுக்குமாடி தொடர் வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன