சுகாதார அமைச்சு கிழக்குமாகாண முதலமைச்சருக்கு.
கிழக்கு மாகாணத்தின் சுகாதாரமும்,சுதேச மருத்துவமும், சமூக நலனோம்புகை, நன்னடத்தை சிறுவர் பாதுகாப்புச் சேவைகள்,மகளிர் அலுவல்கள், இளைஞர் அலுவல்கள், விளையாட்டுத்துறை, தகவல் தொழில்நுட்பக்கல்வி, கூட்டுறவு அபிவிருத்தி, உணவு வழங்கலும் விநியோகமும் தொடர்பான அமைச்சினை கிழக்குமாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்று காலை 08.45 மணியளவில் கிழக்குமாகாண ஆளுனர் ரியர் அத்மிரல் மொகான் விஜேவிக்கிரம முன்னிலையில் பொறுப்றே;றார். மேற்படி நிகழ்வானது ஆளுனர் செயலகம் திருமலையில் இடம் பெற்றது. சுகாதார அமைச்சை ஏலவே எம். எல். ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் பொறுப்பேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.