கிழக்கு மாகாண முதலமைச்சரை புதுடில்லிக்கு வருமாறு இந்திய வெளியுறவுச் செயலர் அழைப்பு.
கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களை பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பொருத்தமான தினத்தில் இந்தியத் தலைநகரான புதுடில்லிக்கு உத்தியோகபூர்வ ஒரு அரசு முறைப் பயணமாக வருகை தருமாறு இந்திய வெளியுறவுத்துறைச்செயலர் திருமதி நிருபமராவ் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார். இன்று (08.03.2010.) முதலமைச்சர் அவர்களை சந்தித்து உரையாடிய போதே இவ் உத்தியோகபூர்வ அழைப்பினை விடுத்திருந்தாக முடிகிறது.
இவ் அழைப்பின் மூலம் இந்தியா, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அரசியல் பிரதிநிதித்துவத்தை ஏற்றுக் கொள்வதுடன், கிழக்கு மாகாண சபையைப் பலப்படுத்தவதற்காக முன்னெடுத்தவரும் தமிழ் மக்கள் விடுதலைப் புpலிகள் கட்சியுடன் இணைந்து செயற்படுவதற்கான ஓர் முதற் சகிம்ஞை ஆக இருக்கலாம் என அரசியல் விமசகர்கள் கருதுகின்றார்கள்.