விருந்தக முகாமைத்துவ பயிற்சி நெறியினை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

img_1834-copyவிருந்தக முகாமைத்துவ பயிற்சி நெறியினை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று திருகோணமலையில் அமைந்துள்ள முகாமைத்துவ அபிவிருத்தி தொழிற்பயிற்சி திணைக்களத்தில் இடம்பெற்றது. கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் வேண்டுகோளிற்கமைய மிகவும் பாதிக்கப்பட்டு தொழில்வாய்ப்பற்று இருக்கின்ற இளைஞர் யுவதிகளுக்கு மேற்படி விருந்தக முகாமைத்துவப் பயிற்சி வழங்கப்பட்டது. குறிப்பாக கிழக்கு மாகாணத்திலே திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இருந்து இப்பயிற்சி நெறிக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான 3 மாத பயிற்சி வழங்கப்பட்டது. முதல் ஒன்றரை மாதம் ஆங்கில பயிற்சி போதிக்கப்பட்டதுடன், சமையல் பயிற்சி நெறி, விருந்தினர்களை வரவேற்றல் தொடர்பான பயிற்சி நெறிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த இப்பயிற்சி நெறியினை நிறைவு செய்த சுமார் 60 மாணவர்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை முதல்வரால் சான்றிதழ்கள் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது. இன்று இப்பயிற்சி நெறியினை நிறைவு செய்த மாணவர்கள் 78 பேருக்கான சான்றிதழ்களை முதலமைச்சர் வழங்கி வைத்ததுடன் இவர்களுக்கான தொழில்வாய்ப்புக்கள் விரைவில் சுற்றுலாத்துறை மூலம் வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

img_1896

img_1861

img_1855