அனர்த்த முகாமைத்துவ செயலமர்வு.

img_2837அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான செயலமர்வு கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் உதயகுமார் தலைமையில் இடம் பெற்றது. ஏசியா பவுண்டேசன் அமைப்பின் அனுசரனையுடன்  இன்று மட்டக்களப்பு மாநகர மண்டபத்தில் மேற்படி செயலமர்வு இடம் பெற்றது. இச் செயலமர்விற்கு கிழக்கு மாகாண மதலமைச்சரும் மாகாண உள்ளுராட்சி அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட முதலமைச்சர் உரையாற்றுகையில், எதிர்பாராமல் ஏற்படுகின்ற ஓர் திடீர் விபத்து அன்ர்த்தம் ஆகும். இவ் அனர்த்தம் ஏறபடாமல் இருப்பதற்கு முதலில் நாம் அனைவரும் இது தொடர்பான ஆரம்ப அறிவினைப் பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் ஏற்படுகின்ற அனர்த்தத்தில் இருந்து நாம் ஓரளவேனும் விடுபட முடியும். எனவே நாட்டில் ஏற்படுகின்ற அன்ர்த்தங்களை நாம் முழுமையாக தடுக்காவிட்டாலும் ஓரளவேனும் குறைப்பதற்கு முயற்சிக்க வேண்டும். குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் அனர்த்தம் ஏற்பட்டால் அதனை எதிர் கொள்வதற்கு எமது உள்ளுராட்சி மன்றங்கள் தயாராக இருக்க வேண்டும். அதிகாரிகள் இத்தருணத்தில் மிகவும் வேகமாகவும் அதே நேரம் விவேகமாகவும் செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
 
இச் செயலமர்விற்கு கிழக்;கு மாகாண பிரதம செயலாளர் பாலசிங்கம், மட்டக்களப்பு மாநகர மேயர் திருமதி சிவகீர்த்தா பிரபாகரன், மட்ககளப்பு அரச அதிபர் அருமைநாயகம், கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் , செயலாளர்கள், பிராந்திய உள்ளுராட்சி ஆணையாளர்கள், ஏசியா பவுண்டேசன் நிறுவனத்pன் நிகழ்ச்சித்pட்டப் பணிப்பாளர் சுபாகரன் ஆகிNயுhர் கலந்து கொண்டார்கள்.