கிழக்கு மாகாண முதலமைச்சருடன் நெதர்லாந்து தூதுவர் நட்புறவுக் கலந்துரையாடல்.

copy-of-img_4389கிழக்கு மாகாண உத்தியோக பூர்வமாக நிலைமைகளை ஆராயும் பொருட்டு விஜயம் மேற்கொண்டிருந்த நெதர்லாந்து நாட்டின் உயர்தானிகர் லியோனி சூலனியஸ் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் திருகோணமலை முதலமைச்சர் அலுவலகத்தில் கலந்துரையாடினார், கிழக்கு மாகாணத்தின் தற்போதைய அரசியல் பொருளாதார நடவடிக்கையில் முதலமைச்சரை தலைவராக கொண்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் என்பன தொடர்பில் நெதர்லாந்து தூதுவர் கலந்துரையாடினார்.
மிகவும் நட்புறவாக இடம்பெற்ற இச்சந்திப்பின் போது கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அரசியல் முன்னெடுப்புக்கள் குறித்தும் முதலமைச்சரினால் விளக்கம் அளிக்கப்பட்டது. முதலமைச்சரின் தற்போதைய நடவடிக்கைகள் அவரின் அரசியல் கருத்துக்கள் பெரிதும் வரவேற்ற நெதர்லாந்து தூதுவர் முதலமைச்சருடன் இணைந்து செயற்படுவதற்கு தமது நாடு ஆவலாக இருப்பதாகவும் முன்பள்ளி பாடசாலை சட்டத்திற்கு தேவையான உதவிகள் குறித்து ஆராய்வதாகவும் குறிப்பிட்டார்.

 

img_4369