கிழக்கு மாகண குடிநீர் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடல்.
கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற குடிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு கிழக்கு மாகாண முதலமைச்சரினால் அமைச்சர் வாரியத்திற்கு கொண்டுவரப்பட்ட பிரேரணையின் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான ஆராய்வுக் கூட்டம் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் முதலமைச்சர் தலைமையில் இடம்பெற்றது.
முதலாவது ஆராய்வுக் கூட்டம் அக்கரைப்பற்று அதாவுல்லா அரங்கில் 31.05.2010 அன்றும், 2வது ஆராய்வுக் கூட்டம் மட்டக்களப்பு கச்சேரியிலும், மூன்றாவது கூட்டம் மட்டக்களப்பிலும் இடம்பெற்றது. விசேடமாக கிழக்கு மாகாணத்தில் வரட்சி காலங்களில் ஏற்படுகின்ற குடிநீர் பிரச்சினைக்கு உள்ளுராட்சி மன்றங்களின் ஊடாக அவர்களுக்கான குடிநீரை வழங்குவது தொடர்பாகவும் பேசப்பட்டது.


