பிறந்திருக்கும் சித்திரைப் புத்தாண்டுதின பூஜை வழிபாட்டில் ஈடுபடும் கிழக்கு முதல்வர்.
மலர்ந்திருக்கின்ற சித்திரைப்புத்தாண்டு தினத்தினையொட்டி இடம்பெற்ற பூஜை வழிபாட்டில் கிழக்கு முதல்வர் சந்திரகாந்தன் கலந்து கொண்டு பூஜை வழிபாடுகளை மேற்கொண்டிருந்தார். மட்டக்களப்பு யானைப்பந்தி பிள்ளையார் ஆலயத்தினை வழிபட்டு விட்டு பின்னர் மட்டக்களப்பு ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் இடம் பெற்ற பூஜை வழிபாட்டில் கலந்து கொண்டார். இரவு 11.07மணிக்கு பிறந்த சித்திரை வருடப்பிறப்பினை ஆலயத்திற்கு சென்று பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டு முதல்வர் சிறப்பித்தார்.


