தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மத்திய செயற்குழு 09-05-2009 அன்று கட்சியின் தலைமைச் செயலகத்தில் கூடியது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கௌரவ. திரு.சி. சந்திரகாந்தன் தலைமையில் கட்சியின் தலைமைச் செயலகத்தில் 09.05.2009 அன்று கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள், கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கட்சியின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் குறித்து ஆராய்ந்திருந்தனர்.
கட்சித் தலைவர் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட கட்சியின் கூட்டமானது மக்களினதும் தாய் மண்ணினதும் நலனுக்காய் உயிர் தியாகங்கள் செய்த அனைத்து மாவீரர்கள், மக்கள் அனைவiரையும் நினைவு கூர்ந்து ஒரு நிமிட இறைவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.
கட்சியின் தலைவர் அவர்களினால் தலைமையுரை ஆற்றப்பட்டதைத் தொடர்ந்து கட்சியின் தனித்துவத்தை பேணவும் எதிர்காலத்தில் கட்சியை அரசியல் ரீதியிலான செயற்பாடுகளை விருத்தி செய்யவும் அனைவரும் கைகோர்த்து கட்சியினால் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத்திடங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கட்சியின் கௌரவ தலைவரும் கிழக்குமாகாண முதலமைச்சருமான சி. சந்திரகாந்தன் அவர்களினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அனைவரும் அற்பணிப்புடன் செயலாற்றுவோம் என்று கூறியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள், ஏனைய கட்சியின் சிரே~;ட உறுப்பினர்கள் தமது கருத்துக்களை கூறியதைத் தொடர்ந்து கட்சியின் கூட்டமானது செயலாளர் திரு. எ. கைலேஸ்வரராஜா அவர்களினால் நன்றியுரை தெரிவிக்கப்பட்டு இனிதே நிறைவுற்றது.
