ரி.எம்.வி.பி கட்சி அறவானின் கொலைக்கு கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியது.

67தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முக்கிய உறுப்பினரும் ஆரையம்பதி பிரதேச அரசியல் கட்சி இணைப்பாளருமான அறவான் என்று அழைக்கப்படும் இராமலிங்கம் ஜெயக்குமார் கடந்த 04-06-2009 அன்று இனந்தெரியாத ஆயுதபாணிகளால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.
இன்று இலங்கையிலிருந்து பயங்கரவாதம் முற்று முழுதாக அளிக்கப்பட்டு உண்மையான விடுதலையினையும் ஜனநாயகத்தினையும் அனைவரும் அனுபவிக்க தயாராகும் இந்த நேரத்தில் இவ்வாறான திட்டமிட்ட படுகொலைகளை ஜனநாயகத்தை நேசிக்கும் எந்வொரு மனிதனாலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் இதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் கூறி கண்டனப் பிரேரணையை கிழக்குமாகாண சபை உறுப்பினரும் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினருமாகிய திரு. எட்சின் கிருஸ்னானந்தராஜா முன்மொழிந்தார். இதனை கட்சியின் வாகனேரி பிரதேச மக்கள் இணைப்பாளர் திரு. ஏ.தேவிகாந் அவர்கள் வழிமொழிந்த்தார். பின்னர் நீண்ட நேர கண்ட உரையுடன் தீர்மானம் நிறைவேறியது.
குறித்த விடயம் நேற்று 09-06-2009 அன்று செவ்வாய் கிழமை காலை கட்சித் தலைவரும் கௌரவ கிழக்குமாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் மட்டு வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள வாசஸ்தலத்தில் கட்சியின் செயற்குழுவும், மத்திய செயற்குழுவும் கூடி தற்கால நிலமைகள் தொட்பாக ஆராயும் கூட்டத்திலேயே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் கொலையாளிகள் யாராக இருந்தாலும் சரியாக இனங்காணப்பட்டு சட்டத்தின் முன்னிலையில் நிறுத்த வேண்டும் எனவும் இதுசம்மந்தமான பொலிஸ் விசாரணையில் பொலிஸாருக்கு முழு ஆதரவு வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.