திருகோணமலை அபேயபுர பெண்கள் உயர்தரப் பாடசாலையின் மூன்று மாடிக்கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து பேசுகையில், கடந்த மூன்று தசாப்த காலங்களில் கிழக்கு மாகாணத்தின் கல்வியில் குறிப்பிட்டளவு வளர்ச்சி காணப்படவில்லை. கடந்த இரு வருடங்களாக கிழக்கு மாகாணசபை மக்கள் பிரதிநிதிகளால் பொறுப்பேற்கப்பட்டதன் பின்னர் ஓரளவான அபிவிருத்தி கல்வியில் ஏற்பட்டிருக்கின்றது என்க் கூறலாம். இவ்வாறான வளர்ச்சி மாற்றம் ஏற்படுவதற்கு மாகாண [...]







