ஏலவே எதிர்வரும் 28ந் திகதி இடம்பெறவிருந்த கிழக்கு மாகாண சபை அமர்வானது ஒரு நாள் முந்தியே(27.02.2012) கூட இருப்பதாக மாகாண சபையின் தவிசாளர் எச்.எம்.எம்.பாயிஸ் தெரிவித்துள்ளார். தற்போது மாகாண சபைகளின் ஒப்பதலுக்காக அனுப்பப்பட்டுள்ள நாடு நகரத்தி திருத்தச் சட்டமூலம் கடந்த 13.02.2012ந் கிழக்கு மாகாண சபையின் அங்கிகாரத்திற்கு சமர்ப்பித்த போது அதில் குறிப்பிட்ட சில மாற்றங்களை செய்து தரும்படி திரும்ப அனுப்பட்டிருந்தது. அப்போது எதிர்வரும் சபை அமர்வு 28.02.2012 அன்று கூடும் எனவும் தவிசாளர் பாயிஸ் அவர்கள் [...]
Archive | செய்திகள் RSS feed for this section
தரிசனம்(விழிப்புலனற்றோர்) கொடி வாரம்-2012.
22 February 2012
தரிசனம் விழப்புலனற்றோர் தேசிய கொடிவாரம் தற்போது அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. மட்டக்களப்பு விழிப்புலனற்றோர் பாடசாலை இதனை வருடாவருடம் அனுஸ்டிப்பது வழமை. இம் முறை மட்டக்களப்பு மாவட்டத்திலே இன்று(22.02.2012) கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களுகு;கு முதலாவது கொடி அணிவிக்கப்பட்டு உத்தியோக பூர்வமாக இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் மட்டக்களப்பு விழப்புலனற்றோர் பாடசாலையின் நிருவாகிகள் மற்றும் அங்குள்ள மாணவர்களும் இதில் கலந்து கொண்டார்கள்.
நிலம் நீரில் வாழும் புதிய உயிரினம் கண்டுபிடிப்பு
22 February 2012
நிலம் மற்றும் நீரில் வாழும் ஒரு புதிய உயிரினத்தை தாங்கள் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பல தசாப்தங்களில் முதல் முறையாக, நிலத்திலும் நீரிலும் வாழும் கால்களற்ற உயிரினத்தை தாங்கள் கண்டுபிடித்துள்ளதாக, இந்த ஆய்வுக் குழுவுக்கு தலமையேற்றிருந்த டில்லி பல்கலைகழகத்தின் சுற்றுச்சூழல் கல்விக்கான மையத்தின் பேராசிரியர் டாக்டர் எஸ் டி பிஜு தெரிவித்துள்ளார். இவை செஸிலியன் குடும்பத்தைச் சேர்ந்தவை என்றும், வாலில்லாத இந்த உயிரினங்களின் உட்புற மற்றும் வெளிப்புறத் தோற்றங்கள், இவை [...]
தரமுயர்த்தப்பட்ட ஏறாவூர் இலங்கை வங்கிகிளை இன்று முதலமைச்சரினால் திறந்து வைப்பு
22 February 2012
கடந்த காலங்களில் இலங்கை வங்கியின் ஓர் சாதாரண வங்கி கிளையாக இயங்கி வந்த ஏறாவூர் இலங்கை வங்கிகிளை இன்று(22.02.2012) தரமுயர்த்தப்பட்டு ஒரு பிரதான வங்கி கிளையாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. இலங்கை வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி காமினி விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர், ஏறாவூர் நகரசபை தலைவர் அலிஸாஹிர் மௌலானா, இலங்கை வங்கியின் கிழக்கு மாகாணப் பிராந்திய முகாமையாளர் சமிந்த [...]
கத்திக் குத்துக்கு இலக்கான நிலையில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு
22 February 2012
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட புதுக்குடியிருப்பு புளியடி வீதியில் கத்திக் குத்துக்கு இலக்கான நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று புதன்கிழமை காலை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு கடற்கரை வீதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சின்னத்தம்பி இளையதம்பி (வயது 63) என்பவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணியளவில் தனது தோட்டத்துக்கு சைக்கிளில் இந்நபர் சென்றிருந்த நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி அப்துல்லா சம்பவ [...]
சிரிய குண்டுவீச்சில் பிரபல ஊடகவியலாளர் மேரி கொல்வின் பலி
22 February 2012
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல யுத்த செய்தியாளரான மேரி கொல்வின் (55) சிரியாவில் செய்தி சேகரிக்கச் சென்றபோது குண்டுவீச்சில் அகப்பட்டு உயிரழந்துள்ளார். பிரிட்டனின் சண்டே டைம்ஸ் பத்திரிகைக்காக 1985 ஆம் ஆண்டு முதல் பணியாற்றிய அவர், பிரான்ஸை சேர்ந்த புகைப்படவியலாளர் ரெமி ஒச்லிக் சகிதம் இன்று புதன்கிழமை உயிரிழந்ததாக பிரெஞ்சு அரசாங்கம் தெரிவித்துள்ளது. கடந்த 30 வருடங்களாக பல்வேறு நாடுகளில் நடைபெற்ற யுத்தங்கள் தொடர்பாக செய்தி சேகரித்த மேரி கொல்வின் இலங்கையில் பணியாற்றியபோது காயமடைந்தார். அதனால் அவரின் இடது [...]
செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தின் வருடார்ந்த இல்ல விளையாட்டுப் போட்டி
22 February 2012
செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தின் 2012ம் ஆண்டிற்கான வருடார்ந்த இல்ல மெய்வலுனர் திறனாய்வு போட்டி வித்தியாலயத்தின் அதிபர் அருள்ராஜா தலைமையில் இன்று(02.02.2012.) இடம் பெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து சிறப்பித்தார். மேலும் சிறப்பதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் வலயக் கலிவி பணிப்பாளர் திருமதி புள்ளநாயகம் ,மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் சிவகுணம்,கல்வி திணைக்கள [...]
கல்குடா தொகுதி பாடசாலை அதிபர்களுடன் முதலமைச்சர் விசேட கலந்துரையாடல்
22 February 2012
கல்குடா தொகுதி பாடசாலைகளின் அதிபர்களுடன் கல்வி அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று(21.02.2011) கிழக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் கல்குடா வலய கல்வி அலுவலகத்தில் இடம் பெற்றது. அதாவது தற்போதுள்ள நிலையில் பாடசாலைகளின் அடைவு மட்டங்கள் மற்றும் கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சை ,உயர்தரப் பரீட்சை மற்றும் 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை என்பவற்றின் பெறுபேறுகளின் வள்ர்ச்சிப் படிகள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலே உள்ள ஏனைய கல்வி வலயங்களுடன் [...]
சிவராத்திரி பூஜை வழிபாட்டில் முதலமைச்சர் கலந்து கொண்டார்.
21 February 2012
வந்தாறுமூலை 5ம் வட்டார கிராமத்திற்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அங்குள்ள பெரியதம்பிரான் ஆலயத்தில் நடைபெற்ற சிவராத்திரி விசேட பூஜைவழிபாட்டில் கலந்து கொண்டார். கிராமத்திலுள்ள மக்களினது தேவைகளை அவர்களது காலடிக்கு சென்று நேரடியாக ர்த்தி செய்து வருகின்ற முதலமைச்சர் இன்று(20.02.2012) வந்தாறுமூலை கிராமத்திற்கு சென்றார். அங்குள்ள மக்களினது அடிப்படைத் தேவைகளை இனங்கண்டு அதனை ப+ர்த்தி செய்து வருகின்ற ஒரு விசேட செயற்றிட்டத்தினை முதலமைச்சர் ஆரம்பித்துள்ளார். எதிர்வரும் காலங்களில் இம் மக்களினது தேவைகள் நிறைவேற்ப்படும் [...]
காணி, பொலிஸ் அதிகாரம் கேட்பதில் தான் தாமதம் என்றாலும் முதலமைச்சருடன் பேசுவதற்கும் தாமதமா…? கி.மா.ச.உ.பூ.பிரசாந்தன் கேள்வி
21 February 2012
தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்போம் என்று நாளாந்தம் மக்களை உசுப்பேற்றுவதுடன், அபிவிருத்திக்காக வரவில்லை தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காகவே அரியாசனம் ஏறினோம் என்று குறிப்பிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தாங்கள் எங்கே நிற்கிறோம் என்பதை திரும்பிப் பார்க்க வேண்டும். தமிழீழம் தான் ஒரே தீர்வென்று மாகாண சபை முறைமையினை வடகிழக்கு இணைந்திருந்த போதே வேண்டாமென்று உறுமியவர்கள் கிடைத்த வாய்ப்பையெல்லாம் விட்டு விட்டு இலட்சக்கணக்கான தமிழர்களின் உயிர்களைக் காவு கொள்ளச் செய்துவிட்டு காலம் கடந்த ஞானமாக [...]


23 February 2012
0 Comments