Archive | செய்திகள் RSS feed for this section

பன்குடாவெளி பிரதேச கிராம சேவகர் அலுவலகத்திற்கு கிழக்கு முதல்வர் திடீர் விஜயம்

14 May 2012

0 Comments

மட்டக்களப்பு பன்குடாவெளி கிராமத்தின் கிராம சேவகர் அலுவலகத்திற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் திடீர் விஜயம் ஒன்றினை 13.05.2012 மேற்கொண்டார். இவ்விஜயத்தில் கிராம சேவகரிடம் கிராமத்தில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பாகவும் எதிர் காலத்தில் பிரதேசத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய திட்டங்கள் செயற்பாடுள் தொடர்பாகவும் ஆராய்ந்தார். இவ்விஜயத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஒருங்கிணைந்த நிறுவனங்களின் பணிப்பாளர் மோகன் அவர்களும் கலந்து கொண்டார்

Continue reading...

பன்குடாவெளி மக்கள் கிழக்கு முதல்வரின் செயற்பாடுகளை பாராட்டி கெளரவித்தனர்

14 May 2012

0 Comments

மட்டக்களப்பு பன்குடாவெளி மக்களால் கிழக்கு முதல்வரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமாகிய சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கெளரவி்கப்பட்டார். கிழக்கு மாகாண முதலமைச்சரின் சேவைகளைப் பாராட்டி பன்குடாவெளி மக்கள் மாபெரும் வரவேற்பு மற்றும் கிழக்கு முதல்வரை கெளரவிப்பு நிழ்வு 13.05 2012 பன்குடாவெளியில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பல அதிகாரிகள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஒருங்கிணைந்த நிறுவன்களின் பணிப்பாளர் க.மோகன் தவிசாளர் வினோத் உட்பட பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Continue reading...

புலிபாய்ந்தகல் கிராமத்தில் சுகாதாரப் பணிப்பாளர் அலுவலம் திறந்து வைக்கப்பட்டது

14 May 2012

0 Comments

மட்டக்களப்பு புலிபாய்ந்தகல் பிரதேசத்தில் பிரதேச சுகாதாரப் பணிப்பாளர் அலுவலகம் 13.05.2012 அன்று திறந்து வைக்கப்பட்டது. மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி சதுர்முகம் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களும், பிரதி அமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் அவர்களும் கலந்து சிறப்பித்ததோடு மாகாண சுகாதார விளையாட்டுத்துறை அமைச்சர் சுபைர் மற்றும் மாகாணசபை உறுப்பினர் ஏ.சி.கிருஸ்னானந்தராஜா, தவிசாளர் உதயஜீவதாஸ், சர்வோதயம் அமைப்பின் செயலாளர் வென்னி ஆராச்சி, யுனிசெப் பிரதிதிநிதி, முன்னாள் கிரான் [...]

Continue reading...

பேத்தாளை இளந்தளிர் விளையாட்டுக் கழகத்தின் விளையாட்டு விழாவில் கிழக்கு முதல்வர் பங்கேற்பு

14 May 2012

0 Comments

பேத்தாளை இளந்தளிர் விளையாட்டுக் கழகத்தின் விளையாட்டு விழா 12.05 2012 அன்று நடைபெற்றது இவ் விளையாட்டு வழாவில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். இவ்விழாவில் முதலமைச்சர் அவர்களை இளந்தளிர் விளையாட்டு் கழகத்தினர் கெளரவித்தமை குறிப்பிடத்தக்கது. விளையாட்டு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து இசை நிகழ்ச்சி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Continue reading...

மட்டக்களப்பில் டெங்கை கட்டுப்படுத்த விசேட செயற்திட்டங்கள்

13 May 2012

0 Comments

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்த்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் இன்று சனிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டன. இலங்கை பொதுச் சுகாதார சங்கத்தின் மட்டக்களப்பு கிளையும் மட்டக்களப்பு சுகாதார திணைக்களமும் மட்டக்களப்பு மாநகரசபையும் இணைந்து இந்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. மட்டக்களப்பில் டெங்கு நோய்த்தாக்கம் அதிகமாகவுள்ள பகுதியான நாவற்குடாவில் இதன் முதல் கட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அத்துடன் இந்த விசேட டெங்கு ஒழிப்பு செயற்றிட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 சுகாதார வைத்திய [...]

Continue reading...

மிருகங்களின் உடற்பாக விற்பனையில் ஈடுபட்ட இரு இந்தியர்கள் கைது

13 May 2012

0 Comments

மிருகங்களின் உடற்பாகங்களை விற்பனை செய்துகொண்டிருந்த இரு இந்திய பிரஜைகளை களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படையினர் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.   சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து சட்டவிரோதமாக வியாபார நடவடிக்கையிலும் இவர்கள் ஈடுபட்டுள்ளதுடன், மிருகங்களின் உடற்பாகங்களையும் விற்பனை செய்துள்ளனர் என்று பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டு களுவாஞ்சிகுடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இவர்களிடமிருந்த சில மிருகங்களில் உடற் பகுதிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.   இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

Continue reading...

குமாரதுரை அருணாசலம் எழுதிய “இலங்கை அரசியல் வரலாறு இழப்புக்களும் பதிவுகளும்” எனும் நூல் வெளியிடப்பட்டது

12 May 2012

0 Comments

குமாரதுரை அருணாசலம் அவர்கள் எழுதிய “இலங்கை அரசியல் வரலாறு இழப்புக்களும் பதிவுகளும்” எனும் நூல் இன்று (12.05.2012) மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாணசபை முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். இந்நூல் ஆய்வுரையினை கிழக்கு பல்கலைக்கழக சமூக விஞ்ஞானத்துறை அரசறிவியல் சிரேஸ்ட விரிவுரையாளர் திரு.வேலுப்பிள்ளை குணரத்தினம் அவர்கள் வழங்கினார். நூலின் முதல் பிரதியினை [...]

Continue reading...

இலங்கை அரசியல் வரலாறு இழப்புக்களும் பதிவுகளும்” எனும் நூல் வெளியீட்டு நிகழ்வுகள் நேரடியாக

12 May 2012

0 Comments

இன்னும் சில நிமிடங்களில் நேரடியாக ஒளிபரப்பாகும்.குமாரதுரை அருணாசலம் அவர்கள் எழுதிய “இலங்கை அரசியல் வரலாறு இழப்புக்களும் பதிவுகளும்” எனும் நூல் வெளியீடு நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட இருக்கின்றன. Watch live streaming video from puthiyavidiyal at livestream.com

Continue reading...

ஐக்கிய இலங்கைக்குள் தீர்வே தமிழ் மக்களின் விருப்பம் சம்பந்தனை சந்தித்த போதும் இதையே கூறினார்

12 May 2012

0 Comments

இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் மற்றும் தமிழ்க் கட்சியினர் அனைவரும் ஐக்கிய இலங்கையே தமக்கு தேவை என்கின்றனர். ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளேயே அவர்கள் வாழ விரும்புகின்றனர். அப்படி இருக்கும் போது தமிழக அரசியல் கட்சியினர் மாத்திரம் ஏன் தனி ஈழம் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றனர் என்று புரியவில்லை என இந்திய மக்களவையின் எதிர்க் கட்சித் தலைவரும் பாரதீய ஜனதாக் கடசித் தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். பாரதீய ஜனதா கட்சியின் மாநில மாநாடு, நேற்று முன்தினம் வியாழக்கிழமை மதுரையில் [...]

Continue reading...

இலங்கை அரசியல் வரலாறு இழப்புக்களும் பதிவுகளும்” எனும் நூல் வெளியீட்டு நிகழ்வுகள் நேரடி ஒளிப்பரப்பப்படும்

11 May 2012

0 Comments

குமாரதுரை அருணாசலம் அவர்கள் எழுதிய “இலங்கை அரசியல் வரலாறு இழப்புக்களும் பதிவுகளும்” எனும் நூல் வெளியீடு நாளை (12.05.2012) சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற இருக்கின்றது. இப் புத்தக வெளியீட்டு நிகழ்வுகள் காலை 10.00 மணிமுதல் நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட இருக்கின்றன . நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் இணையத்தளங்கள் www.meenmagal.net www.puthiyavidiyal.com www.shanthru.com www.unmaikal.com www.makkalinkural.com Watch live streaming video from puthiyavidiyal at livestream.com

Continue reading...